WhatsApp Image 2020 06 17 at 12.28.38 WhatsApp Image 2020 06 17 at 12.28.36 

ஆகஸ்ட் முதலாம் திகதியின் பின்னர் நாட்டிற்குள் வருகை தரும் சகல சுற்றுலாப் பயணிகளுக்கும் 03 பி. சீ. ஆர். சோதனைகளுக்கு உள்ளாக்கப்படும் என கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாடு அமைச்சர் மற்றும் சுற்றுலா மற்றும் விமானச் சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார். நாட்டினுள் கோவிட் 19 தொற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுப்பதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.

இன்று (17) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படுவது குறித்தும், சுற்றுலாப் பயணிகளை அழைத்துவரும் எதிர்காலத் திட்டங்கள் குறித்தும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு கூறினார்.

"கட்டுநாயக்க விமான நிலையம் ஆகஸ்ட் 01 ஆம் திகதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதற்கு இதுவரை சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு பயணியும் நாட்டிற்கு வருவதற்கு முன்னர் அவர்கள் தத்தமது நாட்டினுள் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர். ஐ சோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அறிக்கையை கொண்டு வருதல் வேண்டும். அவ்வாறு அவர்களின் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பி. சி. ஆர். பரிசோதனைக்கான உட்படுத்தப்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்த உடனேயே விமான நிலையத்தில் நாம் பி. சி. ஆர். பரிசோதனையினைச் செய்வோம். அறிக்கை கிடைக்கப் பெறும் வரை அவர்கள் விமான நிலையத்தின் அருகில் தடுத்து வைக்கப்பட்டு  அறிக்கை கிடைத்த உடன் அவர்கள் சுற்றுலா செய்வதற்காக விடுவிக்கப்படுவார்கள். இருப்பினும், இது சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட அடையாளம் காணப்பட்டுள்ள ஹோட்டல்கள் அல்லது தங்குமிடங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். அவர்கள் நாட்டில் தங்கியிருந்த காலத்தில் மேலும் இரண்டு பி. சி. ஆர். சோதனைகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும். இந்த சுற்றுலா பயணிகள் தொடர்ந்து சுகாதாரப் பிரிவின் கண்காணிப்பில் உட்பட்டிருப்பார்கள்.

ஆகஸ்ட் 01 ஆம் திகதி நாம் தான் முதலில் விமான நிலையத்தைத் திறக்கின்றோம் என்று. எனினும், ஏனைய நாடுகள் யூலை 15 ஆம் திகதி முதல் தங்கள் விமான நிலையங்களைத் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. வெளிநாட்டில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் இக் காலத்தினுள் நாட்டிற்கு அழைத்துவருவதற்கு ஏற்பட்டதன் காரணமாக எமது விமான நிலையம் ஆகஸ்ட் 03 ஆம் திகதி திறப்பதற்கு ஏற்பட்டது. இந் நாட்களில் இந்நாட்டிற்கு வர எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வெளிநாட்டில் உள்ள இலங்கைத் தொழிலாளர்களை அழைத்துவர ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் உறுதியாக உள்ளனர். அதன் காரணமாக நாம் ஆகஸ்ட் 01 ஆம் திகதிக்கு திறப்பதற்கு தீர்மானித்தோம்.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகளுக்காக ஹோட்டல்களும் மற்றும் உணவகங்களும் இதுவரை திறக்கப்பட்டு வருகின்றன. நாங்கள் இங்கு சுகாதார பரிந்துரைகள் பற்றி விசேட கவனம் செலுத்துகிறோம். அதன் காரணமாக நாம் இவை அனைத்தையும் சுகாதாரத் துறையின் ஆலோசனைக்கு அமையவே மேற்கொள்கின்றோம். ஏனென்றால் மீண்டும் இந் நாட்டிற்குள் கொரோனா அலை உருவாவதற்கு இடம் கொடுக்க முடியாது. இவை அனைத்தையும் செய்ய எமக்கு நாட்டின் நிலைமை மிகவும் முக்கியமானது. மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டால் இவை அனைத்தும் மீண்டும் மாறலாம்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவி திருமதி கிமாலி பர்னாந்து அவர்கள் -

விமான நிலையம் திறந்தவுடன் இலங்கைக்கு வர ஒன்லைன் வீசாவைப் பெறுவது அவசியமாகும். ஒன்லைன் வீசாவைப் பெறுவதற்கு அவர்கள் இந் நாட்டில் தங்கியிருக்கும் காலம் எதிர்பார்த்திருக்கும் இடம் போன்ற அனைத்து தகவல்களும் பெறப்படும். அதற்கேற்ப இச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைதந்ததிலிருந்து திரும்பிச் செல்லும் வரை நாம் மிகவும் கூடிய அவதானத்துடன் இருக்கின்றோம்.

சிவில் விமான  சேவைகள் அதிகார சபையின் தலைவர் திரு. உபுல் தர்மதாச அவர்கள் -

தற்பொழுது உலகில் 115 நாடுகளிலுள்ள விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 57 நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆபிரிக்கா போன்ற நாடுகளில் தான் அதிகம் திறக்கப்பட்டுள்ளன. எனினும் நூற்றுக்கு நூறு செயற்பாடுகள் இடம்பெறுவதில்லை. சுகாதாரச் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப அது போன்ற நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நாம் விமான நிலையத்தினை முழுமையாக மூடிவிடவில்லை. நாட்டிற்கு வருகின்ற விமானங்களை மட்டுமே நிறுத்தியுள்ளன. நாட்டிலிருந்து புறப்படும் சேவைகள் இடம்பெறுகின்றன. இந்தியா போன்ற நாடுகள் முழுமையாக விமான நிலையத்தினை மூடியுள்ளன. ஏதேனும் நாடுகளில் சிக்கியுள்ள அந் நாட்டவர்களை அழைத்து வரப்படவில்லை. எனினும் நாம் எமது நாட்டவர்கள் எங்கேயாவது சிக்கியிருந்தால் அவர்களை அழைத்துவரை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இன்றுவரை 10,000 பேர் அளவில் வந்திருக்கின்றார்கள்.

விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் மேஜர் ஜி. ஏ. சந்திரசிரி அவர்கள் -

விமான நிலையத்திற்கு வருகின்ற அனைத்து விமானங்களும் தொற்று நீக்கி மருந்துகளைக் கொண்டு சுத்தம் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு விமானப் பயணங்களின் பின்னர் விமான நிலையமும்  கிருமி நீக்கம் செய்யப்படுகின்றது. சுற்றுலாப் பயணிகள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு ஆரம்பித்ததன் பின்னர் எமக்கு கட்டுநாயக்க விமான நிலையம் மட்டும் போதுமானதாக இருக்காது. அதன் காரணமாக நாம் மத்தள விமான நிலையச் செயற்பாடுகளையும் ஆரம்பிக்க எதிர்பார்த்திருக்கின்றோம்.

விமான நிலையங்களில் இந்த வைரஸ் நாட்டிற்குள் வருவதைத் தடுப்பதற்கு முடியாது போனால் அது பாரதூரமான சிக்கலாக அமையும். அதன் காரணமாக கொவிட் 19 நோயாளி ஒருவர் மீண்டும் இந் நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகளை நாம் முற்றுமுழுதாக  நிறுத்தியுள்ளோம்.

சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் திரு. எம். ஹெட்டிஆரச்சி அவர்களும் அங்கு கருத்துத் தெரிவித்தார்.

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Sri Lanka Tourism shows its colors at the Embassy Festival in Hague, Netherlands

Sri Lanka Tourism, in collaboration with the Embassy of Sri Lanka in the Hague, had the opportunity of showing that it’s a travel destination visiting at least for once in a lifetime, which spread the island destinations ‘uniqueness all across the Eu

Continue Reading

Sri Lanka Tourism Showcases Strong Presence at JATA Tourism Expo 2025 in Nagoya, Japan

Sri Lanka Tourism successfully participated in the JATA Tourism Expo 2025, an international travel fair held from 25th to 28th September 2025 at the Aichi Sky Expo (Aichi International Exhibition Center) in Nagoya, Japan. As one of Asia’s premier tra

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

Exit
மாவட்டம்