1.1 அறிமுகம்
சுற்றுலாத்துறை அமைச்சானது 2187/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் 2020 ஆவணி மாதம் 09ஆம் திகதி தாபிக்கப்பட்டது. மேலும் 2196/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஐப்பசி மாதம் 06ஆம் திகதி திருத்தியமைக்கப்பட்டது. சுற்றுலாத்துறை தொடர்பிலான பொறுப்புக்களைக் கொண்டு தாபிக்கப்பட்ட இவ் அமைச்சின் பிரதான இலக்குகளுள், பொருத்தமான கொள்கை மற்றும் ஒழுங்குறுத்துகை வேலைச்சட்டகம் ஆகியவற்றை வகுத்தல் மற்றும் சிறந்த உட்கட்டமைப்பு வசதிகளையும், சுற்றுலாவுக்கான இலக்கு நாடாக இலங்கை ஊக்குவிக்கப்படுவதையும் உறுதிப்படுத்தல் மற்றும் அமைச்சின் கீழ் செயற்படும் நோக்கில் வர்த்தமானி மூலம் வெளிப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் நிதிசார் மேற்பார்வை ஆகியற்றைப் பேணுதல் போன்றனவும் உள்ளடங்குகின்றன.
1.2 தூரநோக்கு மற்றும் குறிக்கோள்
1.2.1 தூரநோக்கு
மறக்கமுடியாத, உண்மையான, பல்லினத்துவம் வாய்ந்த சுற்றுலா அனுபவங்களுக்கான உலகத்தில் மிகச்சிறந்த தீவாக மதிக்கப்படுதல்
1.2.2 குறிக்கோள்
சமூக ரீதியில் பிரத்தியேகமானதும், சுற்றாடல் ரீதியில் பொறுப்பு வாய்ந்ததுமான இலங்கையின் இயற்கை மற்றும் கலாசார மரபுரிமைகளைப் பிரதிபலிக்கும் அதே வேளையில், நிலைபேறாக தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாத்தலுடன், அதிவிசேடமான சுற்றுலா அனுபவங்களையும் அதேநேரம் நாட்டிற்கும், மக்களுக்கும் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக் கொடுக்கின்ற மிக உயர் பெறுமானமுடைய ஒரு சுற்றுலா தலமாக இலங்கையை விளங்கச்செய்தல்.
1.3 பிரதான செயற்பாடுகள்;
- அமைச்சின் கீழான விடயப்பரப்புகள் தொடர்பாக கொள்கைகள், நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல், செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
- தனது இராஜாங்க அமைச்சுக்கு கொள்கைகள் தொடர்பான வழிகாட்டுதலை வழங்குதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட விதிகள், சட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்களுக்கிணங்க, சுற்றுலாத்துறை விடயப்பரப்புக்கான கொள்கைகளை வகுத்தல்.
- தேசிய வரவுசெலவுத் திட்டம், அரச முதலீடுகள் மற்றும் தேசிய அபிவிருத்தித் திட்டங்களின் கீழ் செயற்திட்டங்களை செயல்படுத்துதல்.
- “சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக மற்றும் அரசினால் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் கொள்கைகள் என்பனவற்றிற்கு அமைய உயர்ந்த அந்நியச் செலாவணியைக் குறிக்N;காளாகக் கொண்ட சூழல் மற்றும் உள்நாட்டு கலாச்சாரநேய சுற்றுலாக் கைத்தொழிலொன்றை" ஏற்படுத்துவதற்காகத் விதித்துரைக்கப்பட்டு;ள்ள சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு அமைய சுற்றுலாத்துறையை அமைத்துக்கொள்ளல்.
1.3.1 விசேட முன்னுரிமைகள்
(1) அதிகளவிலான நபர்களின் கலந்துகொள்ளலுடன் சுற்றாடல் மற்றும் உள்ளுர் கலாசார நேயமிக்க சுற்றுலா கைத்தொழிலொன்றை அபிவிருத்தி செய்வதற்குரிய வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.
(2) சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புத் தொடர்பாக விசேட வேலைத்திட்டமொன்றைத் தயாரித்தல்.
(3) உள்நாட்டு/வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான கவர்ச்சிகரமான இடங்களை அடையாளங் காணுதல்.
(4) சுற்றுலாப் பயணிகளை கவர்வதற்காக வியாபார கருத்தரங்குகள், விழாக்கள், கண்காட்சிகள் என்பவற்றை நடாத்துவதற்கு வசதியளித்தல்.
(5) சுற்றுலாக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக தனியார் துறைக்கு முதலீடுகளையும் வேறு வசதிகளையும் வழங்குதல்.
(6) பிரதான சுற்றுலா நகரங்களை இணைக்கும் வீதிச் சந்திகளில் சுற்றுலாச் சேவை நிலையங்களை அமைத்தல்.
(7) பிரதேச அலுவலகங்களைத் தாபிப்பதன் மூலம் சுற்றுலா வசதிகளை அங்கீகரிக்கும் செயற்பாட்டை விதிமுறைப்படுத்தல்.
(8) பிரதான சுற்றுலா நகரங்களில் சுற்றுலாப் பயிற்சி பாடசாலைகளை தாபித்தலும், கவர்ச்சிகரமான திறன்கள் அபிவிருத்தி பாடநெறிகளை அறிமுகப்படுத்தலும்.
(9) வீடுகளைச் சார்ந்ததாகவும், சமுதாயம் சார்ந்ததாகவும் சுற்றுலாக் கைத்தொழிலை அபிவிருத்தி செய்தல்.
(10) அனைத்து சுற்றுலா வழிகாட்டிகளையும், சாரதிகளையும் பதிவு செய்தலும், பயிற்றுவித்தலும் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவதற்குரிய நடவடிகைகளை எடுத்தல்.
(11) சுற்றுலா வியாபாரத்தைச் சார்ந்ததாக தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கு விசேட வேலைத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தல்.
(12) தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
(13) தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு வசதிகளை அளித்தலானது, One Stop எண்ணக்கருவின் கீழ் ஒரு கூட்டிணைப்பு நிலையத்தினூடாக மேற்கொள்ளும் திறன்முறையினை நடைமுறைப்படுத்தல்.
(14) உயர் தரத்திலான சுற்றுலா ஹோட்டல்களைத் தாபித்தலும், தற்போதிருக்கின்ற ஹோட்டல் அறைகளின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்தலும்.
(15) சுற்றுலாப் பயணிகளுக்கிடையே தேசிய மரபுரிமைகள் மற்றும் தொல்பொருளியல் இடங்கள் தொடர்பாக சரியான தகவல்களை சுற்றுலா பயணிகளுக்கிடையே பிரபல்யப்படுத்துவதற்காக சுற்றுலா வழிகாட்டிகளுக்கு சரியான அறிவினையும், தகவல்களையும் வழங்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தல்.
1.4 நிறுவனக் கட்டமைப்பு
1.5 அமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்கள்
- இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை
- இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம்
- இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனம்
- இலங்கை மாநாட்டுப் பணியகம்
- தேசிய தாவரவியல் பூங்கா திணைக்களம்