• மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் கிழக்கு மாகாணத்தின் முழுமையான வசதிகளைக் கொண்ட விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும்....
  • அதற்கு முத்தரப்பு உடன்படிக்கையொன்று......

மட்டக்களப்பு சர்வதேச விமான நிலையம் கிழக்கு மாகாணத்தின் முழுமையான வசதிகளைக் கொண்ட உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சேவை வழங்குதல் இதன் குறிக்கோளாகும் என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.

இது தொடர்பாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் கம்பனி, இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகாரசபை மற்றும் விமானப் படை என்பவற்றுக்கிடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்றைச் செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. சிவில் விமான சேவைகள் அதிகாரசபை இந்த உடன்படிக்கையை தற்பொழுது தயார் செய்து வருகின்றது. சிவில் மற்றும் இராணுவ செயற்பாடுகளுக்கிடையே தெளிவான பிரிவொன்றை ஏற்படுத்துவதற்கு இதன் ஊடாக எதிர்பார்க்கின்றது. விமான ஓடு பாதையின் வடக்கு பிரதேசத்திற்கு அருகாமையில் விமானப் பயண கட்டுப்பாட்டுக் கோபுரங்கள் மற்றும் தீயிலிருந்து விடுபட்டுக் கொள்வதற்கான வசதிகளை நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

விமான நிலைய வளாகத்தினுள் வர்த்தக முதலீட்டுச் சந்தர்ப்பங்களை இனங் கண்டு கொள்வதற்கும் விசேட வேலைத்திட்டமொன்றும் அமுல்படுத்தப்படுவதாக அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். விமான போக்குவரத்துத் துறைக்குள் வருகின்ற மற்றும் வராத முதலீட்டுச் சந்தர்ப்பங்களை பற்றி இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்  அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். மட்டக்களப்புப் பிரதேசத்தில் சுற்றுலா பயணிகளுக்கான ஹோட்டல்கள், சுற்றுலாத்துறையில் செயற்படுபவர்களுடன் மட்டக்களப்பு விமான நிலையத்தை மேம்படுத்தும் விசேட செயற்றிட்டமொன்றும் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அதே வேளை, கொவிட் தொற்று நோய் காரணமாக தடைப்பட்ட யாழ்ப்பாணம் – கொழும்பு விமானப் பயணங்களை மீண்டும் துரிதமாக தொடங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் அதனுடன் தொடர்புடைய கம்பனிகளுடன் கலந்துரையாடி வருவதாகவும் மற்றும் இந்த வருடத்தின் ஆரம்ப காலாண்டின் போது அந்த விமானப் பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் இயலுமை கிடைக்கும் எனவும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

  • கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதி தொடர்பாக புதிய போக்குவரத்து திட்டமொன்று தயாரிக்கப்படுகிறது....
  • இத்திட்டம் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது....
  • செலவிடப்படும் தொகை ரூபா 600 மில்லியன் ஆகும்.....
  • தற்போது விமான நிலையத்தில் உள்ள பயணிகள் முனைய கட்டிடமும் மறுசீரமைக்கப்படும் ......

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகள் தொடர்பாக புதிய போக்குவரத்து திட்டமொன்று தயாரிக்கப்பட்டு வருகிறது. விமான நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே இதன் நோக்கம் ஆகும். இந்த செயற்றிட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என சுற்றுலா  அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தெரிவித்துள்ளார்கள். 

கட்டம் 1 இன் கீழ் 660 மீற்றர் நீளமான நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இரு வழிப்பாதை எவரிவத்தை சந்தியிலிருந்து முதலீட்டுச் சபை  நுழைவு வரை நிர்மாணிக்கபடும். அதன் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. அதே சமயம் எவரிவத்தை சுற்று வட்டப்பாதை சந்தியும் அபிவிருத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டம் 2 இன் கீழ், இலங்கை காணி அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் தேவையான வடிகால் கட்டமைப்புக்களை நிர்மாணிப்பதுடன் முதலீட்டுச் சபை  நுழைவாயிலிலிருந்து மினுவங்கொட வரை 1050 மீற்றர் நீளமுள்ள நான்கு ஒழுங்கைகளைக் கொண்ட இருவழிப்பாதை நிர்மாணிக்கப்படும். இச் செயற்றிட்டத்தின்  மொத்தச் செலவு 600 மில்லியன் ரூபா ஆகும். கட்டுநாயக்க விமான நிலையத்தில் அனைத்து வருகைகள் மற்றும் வெளிச்செல்கைகள் தொடர்பாக பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு சோதனையின் பின்னரே விமான நிலையத்திற்குள் நுழைய முடியும் என்பதோடு வருகை மற்றும் வெளியேறும்  முனையங்களுக்கு எவ்வாறு பிரவேசிப்பது என்பதற்கான சமிஞ்சை கட்டமைப்புக்களை  நிறுவுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விமான நிலையத்தில் தற்போதுள்ள பயணிகள் முனைய கட்டிடத்தொகுதியை பயணிகளின் வசதிக்காக மீள்கட்டமைப்புச் செய்வதற்கும் புனரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள்தெரிவித்துள்ளார்கள். விமான நிலையத்தில் பயணிகளை கையாளும் இயலளவு பற்றாக்குறை பிரச்னைக்கு தீர்வொன்றாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பயணிகள் முனைய கட்டிடத்தை குடியகல்வு பகுதியில் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பாக செலவிடப்பட்ட தொகை ரூபா 430 மில்லியன்கள் ஆகும். இச் செயற்றிட்டத்தின் கீழ், குடிவரவு மற்றும் குடியகல்வு பகுதி, மேல்மாடிக்கு மாற்றப்படவுள்ளதுடன், மேலும் 04 குடிவரவு கருமபீடங்கள், மேலும் 05 நுழைவுக் கருமபீடங்கள், இரண்டு எஸ்கலேட்டர்கள், ஒரு லிஃப்ட் மற்றும் ஒரு புதிய படிக்கட்டுத் தொகுதி, மேலதிக இடவசதிகள், உணவகங்கள் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றை அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிப்புப் பணிகள் ஏற்கனவே நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார். இந்தச் செயற்றிட்டத்தை இந்த ஆண்டின் போது நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

06 மில்லியனாக இருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளை கையாளும் இயலளவு தற்போது 10 மில்லியனைத் தாண்டியுள்ளதுடன், விமான நிலைய விரிவாக்கத் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர் பயணிகளைக் கையாளும் இயலளவு 15 மில்லியனாக அதிகரிக்கும். கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த காலப்பகுதிக்குள் நிர்மாணிப்புப் பணிகளை முடிக்குமாறு சம்பந்தப்பட்ட பிரிவுகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

  • கோவிட் பின்னரான புதிய பொதுமயமாக்கலின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தின் நடவடிக்கைகளை நெறிப்படுத்துவதற்கு தொடர்புடைய அனைத்து நிறுவனங்களாலும் துரிதப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த வேலைத்திட்டம்
  •  கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கான திட்டங்கள்
  •  பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க விமான நிலையத்தில் உள்ள அனைத்து நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளைக் கொண்ட நிர்வாகக் குழு

கோவிட் பின்னரான புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கான இணைந்த வேலைத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம், சுகாதாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன இணைந்து இந்த கூட்டு முயற்சிகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (22) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதே இதன் நோக்கமாகும்.

கோவிட் தொற்றின் பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சாதாரணமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (22) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான சேவை மற்றும் ஏற்றுமதி  வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் விமான நிலையத்தில் குடிவரவு சுங்கம், சுகாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான நிலையத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் பயணிகளுக்கான இடையூறுகளை குறைக்க முடியும் என்றார். விமான நிலையத்தின் தலைவர் தலைமையில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய கூட்டு முகாமைத்துவக் குழு ஒன்று கூடி இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு கருமபீடங்களில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்தப்பட்டது. விமான நிலையத்தில் அவசர நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஒப்புக்கொண்டார். சுற்றுலாப்பயணிகள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விசேட குடிவரவு கருமபீடங்களை அறிமுகப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பரிந்துரைத்தார். குடிவரவு அதிகாரிகளும் இதற்கு ஒப்புக்கொண்டனர். நவீன தொழில்நுட்பத்தின் அறிமுகத்துடன், வருகை முனையத்தில் குடிவரவு கருமபீடங்களின் எண்ணிக்கை 25 இல் இருந்து 31 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் குடியகல்வு சாளரங்களின் எண்ணிக்கை 18 இல் இருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பிலான நீண்ட கலந்துரையாடலின்போது, ​​கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள புதிய இயல்புநிலைப்படுத்தல் வேலைத்திட்டம் காரணமாக இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் தலைவர் அசோக் பத்திரன வலியுறுத்தினார். இப்பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கும் தலைவர் ஒப்புக்கொண்டார். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிவரும் இலங்கையர்கள் தங்கு தடையின்றி விமான நிலையத்தில் தமது கடமைகளை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன வலியுறுத்தினார். அதற்கான வசதியை பெற்றுக் கொடுக்கலாமென விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார அறிக்கைகளை விரைவாக சேகரிக்கும் நடவடிக்கைகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது. தாமதத்தை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ச, அனைத்து நடவடிக்கைகளுக்கும் கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக வலியுறுத்தியதோடு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சுகாதாரத்துறை கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும், இது தொடர்பில் சட்டமா அதிபர் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் தினசரி பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், விமான நிலையத்தில் நாளாந்த பயணிகளின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டியுள்ளது.

 

FO4A0030 3

மத்தள சர்வதேச விமன நிலையம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் பிரயாணத்தளமாக மேம்படுத்தப்படும். அது தொடர்பாக சர்வதேச விமானக் கம்பனிகள் மற்றும் வியாபார ஜெட் விமானங்களை கவரும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.

மத்தள விமனா நிலையம் சர்வதேச விமானங்களை கவர்வதற்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. மத்தள விமான நிலையம் இறக்குமதி வரியான அமேரிக்க டொளர் 60 ஐ இரண்டு வருடங்களுக்கு பெற்றுக் கொள்வதை இடைநிறுத்தியுள்ளதுடன் தரையிறக்கும் மற்றும் தரித்து வைப்பதற்கான கட்டணங்களிலும் விமானக் கம்பனிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. மிகவும் வசதிபடைத்த வியாபார பிரமுகர்களை கவர்வதன் ஊடாக வியாபார ஜெட் விமானங்களை தருவித்துக் கொள்வதற்கு கலந்துரையாடல் சுற்றுக்கள் பல நடாத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தீர்வை வரியற்ற கடைத் தொகுதிகளை நடாத்திச் செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் தொடர்பாடல் சேவைகள் மற்றும் வங்கி கரும பீடங்களையும் பேணிச் செல்வதற்கும் தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தற்பொழுது மத்தள ராஜபக்‌ஷ விமான நிலையத்திற்கு மாலைதீவு, கட்டார், எயார் ஏசியா ஆகிய விமான சேவைகள் நேரடி விமான பயணங்களை மேற்கொள்கின்றன. மேலும் பல சர்வதேச விமான சேவைகள் எதிர்வரும் வருடத்தில் மத்தள புதிய விமான நிலையத்துடன்  செயற்படுத்தல்களை ஆரம்பிப்பதற்கு விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. அவர்களுடன் தற்பொழுது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார். சலாம் எயார் விமான கம்பனி தனது சரக்கு கையாள்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் எமிரேட்ஸ் விமானக் கம்பனி மிக அண்மையில் தனது சரக்கு கையாள்கைகளை மத்தள விமான நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், கடற்படை பதவியணி பரிமாற்றம் செய்தல் தொடர்பாக கேந்திர நிலையமாகவும் மத்தள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டார் விமானக் கம்பனி மற்றும் எயார் ஏசியா கம்பனி என்பன தற்பொழுது தமது கையாள்கைகளை மத்தளை விமான நிலையத்துடன் செயற்படுத்துகின்றன. 2020 பெப்புருவரி மாதம் முதல் இந்திய பிராந்தியம் மூடப்பட்டமையின் காரணமாக கடல் பதவியணி பரிமாற்றம் தொடர்பாக இந்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.

அதே வேளை மத்தள விமான நிலையத்தில் விமானங்களின் பராமரிப்பு மற்றும் திருத்தம் செய்யும் வசதிகளை தாபிக்கும் பணிகள் தொடர்பாக அரசின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  அதன் பிரகாரம், விசேட முதலீடொன்றின் ஊடாக அல்லது இலங்கைக் கம்பனியுடன் ஒருங்கிணைந்த தொழில்முயற்சியாக அதனை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அது தொடர்பாக மேலும் பல படிமுறைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மத்தள விமான நிலையம் இந்த ஆண்டின் முதல் 09 மாத காலத்தின் போது 518 விமான பிரயாணங்களை மேற்கொண்டுள்ளன. 27,859 பிரயாணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கையாப்பட்ட விமான சரக்கின் அளவு மெற்றிக் டொன் 21.5 ஆகும். முன்னைய வருடத்தின் முதல் 09 மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பிரயாணிகளின் கையாள்கையில் 52% அதிகரிப்பொன்றாகும். சரக்கு கையாள்கையில்  106% அதிகரிப்பொன்றும் காணப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமானது உலகின் கிழக்கு மற்றும் மேற்குப் வலயங்களை இணைக்கும் ஆசியாவின் விமானப் போக்குவரத்துச் சேவை நிலையமொன்றாக அபிவிருத்திச் செய்யும் முதலாவது படிமுறையைக் குறிக்கும் வகையில், விமான நிலைய விரிவாக்கச் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டமானது பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று (25) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சுப நேரத்தில் பொதுமக்களின் பாவனைக்காக  திறந்து வைக்கப்பட்டது.

இந் நாட்டின் இரண்டாவது பாரிய அபிவிருத்தித் செயற்திட்டமாக கருதப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் நோக்கமானது  இலங்கையின் அடையாளத்தை வெளிக்காட்டும் வகையில்  சர்வதேச விமான  ஓடுபாதைகளுக்கு இணைவாக புதிய திட்டத்திற்கு ஏற்ப விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதாகும்.

முழுமையான செயற்றிட்டம் பூர்த்தியடையும் போது , தற்போது ஆறு மில்லியனாக இருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளைக் கையாளும் திறனானது, பதினைந்து  மில்லியன் பயணிகள் வரை அதிகரிப்பதற்கு இயலுமை கிடைக்கும்.

யப்பான் இலங்கை ஒருங்கிணைந்த செயற்றிட்டமொன்றான கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்யும் செயற்றிட்டத்தின்  B - பொதி செயற்றிட்டத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ள  மொத்தத் தொகை ரூபா 6 பில்லியன்கள் ஆகும்.  2014 ஆம் ஆண்டின் போது பதவியில் இருந்த சனாதிபதியான மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களினதும் யப்பானின் முன்னாள் பிரதமர்  சின்ஹுவா அபே ஆகியோரின் தலைமைலும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்யும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

புதிய செயற்றிட்டம் முழுமையாக நிர்மாணிக்பட்டு நிறைவடையும் போது  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தி வைக்கும் தளங்களின் அளவு 49 வரை அதிகரிப்பதுடன் அதன் மூலம் தற்போதுள்ளது போன்று விமானங்களை  நிறுத்தி வைக்கும் வசதி  இரண்டு மடங்காக அதிகரிக்கும்.

இங்கு வெளியேறும் ஓடு பாதை நீளமாக்கப்படுவதால் விமானங்கள் புதிய முனைய கட்டடத்துக்குள் பிரவேசிக்க  வசதிகள் வழங்கப்படும்.

B பொதியின்  கீழ் தூரவுள்ள முனையம்  பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தற்போது காணப்படும் தளம் 269,000 கன மீட்டரிலிருந்து 479, 000 கன மீட்டர் வரை  விரிவாக்கப்படுவதோடு, அதன் மூலம் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் கேள்விக்கும் மற்றும் விமானங்களை செயற்படுத்துவதற்கு உயர் வசதிகள் கிடைக்கும்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டமானது முழுமையாக நிறைவடையும் போது சோதனைக் கூடங்கள் 52 இலிருந்து 149 வரை அதிகரிக்கப்படுவதோடு  குடிபெயர்வு கூடங்களின் எண்ணிக்கை 21 இலிருந்து 53 வரையும், குடிவரவு கூடங்களின் எண்ணிக்கை  27 இலிருந்து 83 வரையும் அதிகரிக்கப்படும்.

தற்போதுள்ள விமான பஸ்களுக்கான கதவுகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 16 வரை அதிகரிப்பதோடு விமான நிலைய ஓய்வு அறைகளின் எண்ணிக்கை 4 இல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்படும்.

உலகில் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஆசியாவின் விமான சேவைகள் மத்திய நிலையமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இலங்கையின்  அடையாளமாக வெளிக்காட்டும் வகையில் அபிவிருத்தி செய்வது மஹிந்த சிந்தனையினதும்  சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக் கூற்றினதும் முன்னுரிமை கொள்கையொன்றாகும். கட்டுநாயக்க விமானநிலைய விரிவாக்கத் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கும் சந்தர்ப்பத்தில் யப்பானின்  இலங்கைக்கான  தூதுவர் ஹிடேகி மிசுகோஷி (Hideaki MIZUKOSHI) அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விளையாட்டு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக்க ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.

 

1f990efb 8b5d 49c3 91ec 14f39a877aa0
7d7b60ad 1841 4161 b8ee 463dc353cf22
74edfd9e 54bb 4e47 882a 96f5e0b60525

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Promoting Sri Lanka and its many diverse facets to the World

The contemporary traveler has a limitless choice of destinations and experiences all competing for their time and money. The ability to communicate a destination’s many aspects is vital when appealing to an international audience.

Continue Reading

Press Release: Santani becomes the first Sri Lankan hotel to be selected as “worlds best” – hailed as Best Wellness Retreat in the World by Travel+Leisure India

Travel+Leisure’s readership voted for their favourite wellness retreat in the world and have chosen Santani, Sri Lanka as the best in the world. Santani’s unique and scientific approach to wellness and ayurveda has made it stand out once again, wit

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

Exit
மாவட்டம்