• நாட்டில் அமுலில் உள்ள அபிவிருத்தி செயற்திட்டங்களை உரிய காலத்தில் நிறைவு செய்வதற்கு அரசு விசேட கவனம்.......
  • கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெகேஜ் ஏ செயற்திட்டத்தை உரிய காலத்தினுள் பூர்த்தி செய்யுமாறு அறிவுறுத்தல்........

-அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

நாட்டினுள் அமுல்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை உரிய காலத்தில் பூர்த்தி செய்வதற்கு  அரசு தனது விசேட கவனத்தைச் செலுத்தியுள்ளது என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்தி செயற்திட்டமும் உரிய காலத்தில் நிறைவு செய்யப்படுதல் வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பெகேஜ் ஏ செயற்திட்டத்தின் முன்னேற்றம் பற்றி நேற்று (14) ஆம் திகதி அமைச்சில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பெகேஜ் ஏ செயற்திட்டமாக அறிமுகம் செய்வது கட்டுநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்யும் செயற்திட்டத்தின் இரண்டாவது கட்டமாகும். அது 2020 ஆம் ஆண்டில் இந்நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தி செயற்திட்டமாகும். 2014 ஆம் ஆண்டில் அப்போது பதவியில் இருந்த சனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் முன்னாள் பிரதம அமைச்சர் சிங்சோ அபே அவர்களின் தலைமையில் இந்த நிர்மாணிப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு 03 வருடங்களினுள் நிறைவு செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் பெகேஜ் ஏ செயற்திட்டத்தின் நிர்மாண பணிகளை கடந்த நல்லாட்சி அரசாங்கம் கைவிட்டிருந்தது. செயற்திட்டம் மீள ஆரம்பிக்கப்பட்டது தற்பொழுதைய அரசு ஆட்ச்சிக்கு வந்த பின்னர் 2020 ஆம் ஆண்டு நவெம்பர் மாதம் 18 ஆம் திகதியாகும். நல்லாட்சி அரசாங்கம் இந்தச் செயற்திட்டத்தை கைவிட்டு 05 வருடங்களின் பின்னராகும்.

இதன் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு வருடத்திற்கு  பயணிகளை கையாளும் இயலுமை 15 மில்லியன்கள் வரை அதிகரிக்கும். அதற்காக பிரயாணிகள் டேமினலொன்று நிர்மாணிக்கப்படுவதுடன் உயர்வீதி கட்டமைப்பொன்று, பிரயாணிகள் பாலங்கள், மழை நீரை அகற்றும் தொகுதியொன்று, உயிரியல் வாயுத் திட்டத்துடன் கொம்போஸ்ட் தொகுதியொன்று, 05 மாடிகளைக் கொண்ட வாகன தரிப்பிடமொன்றும் நிர்மாணிக்கப்படுகின்றன. செயற்திட்டம் யப்பான் யென் 41,553,286 (மில்லியன் 41553) மற்றும் ரூபா 35,135,843,333 ( 35,135 மில்லியன்) திரண்ட பெறுமதியைக் கொண்டது.

இந்த செயற்திட்டத்தின் நிர்மாணிப்புக்கள் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக இங்கு நீண்ட நேரம் கவனம் செலுத்திய கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இந்தப் பிரச்சினையை பொதுத் திறைசேரி மற்றும் நிதி அமைச்சிற்கு முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. அது தொடர்பாக மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சுடன் விசேட கலந்துரையாடலொன்றை எதிர்காலத்தில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

கொவிட் தொற்று நோய் காரணமாக இந்நாட்டின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் மந்தமடையக் கூடாது என்பது அரசின் நிலைப்பாடு என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேலும் சுட்டிக் காட்டினார்கள். அதன் காரணமாக நிர்மாணிப்புக்கள் எக்காரணம் கொண்டும் தாமதமடைவதற்கு இடமளிக்க வேண்டாம் என ஒப்பந்தக்கார கம்பனிக்கு ஆலோசனை வழங்கிய அமைச்சர் தொடர்புடைய பிரச்சினைகளை துரிதமாக இனங்கண்டு அவற்றை தீர்த்துக் கொள்வதற்கு அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் கம்பனியின் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்கள்.

இந்தக் கலந்துரையாடலுக்கு இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக, சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, விமான நிலைய மற்றும் அபிவிருத்தி மற்றும் ஏற்றுமதி திட்டமிடல் வலய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜனக சிறி சந்திரகுப்த, அவ் அமைச்சின் மேலதிக செயலாளர் சுனில் குணவர்தன, விமான நிலைய மற்றும் விமான சேவை கம்பனியின் உப தலைவர் ரஜீவ சூரிய ஆரச்சி ஆகியோர் உள்ளடங்கலான ஒரு தொகுதியினர் இங்கு ஒன்று கூடியிருந்தனர்.

 

WhatsApp Image 2022 02 14 at 16.29.48

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Wildlife and Nature-based Purpose-driven travel to play a pivotal role in Tourism Promotions in the UK -2025

Sri Lanka Tourism successfully promoted its renewed focus on purpose-driven travel through major event held in the United Kingdom, emphasizing the island’s rich biodiversity and unique nature-based tourism experiences. The initiative was aimed at pos

Continue Reading

British National Honored for Heroic Efforts in Ella Bus Tragedy

Colombo, Sri Lanka — September 10, 2025 A heartfelt felicitation ceremony was held at the Parliament of Sri Lanka to honor Ms. Amy Victoria Gibb, a British national, for her extraordinary humanitarian service during the tragic bus accident on Ella–Ra

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

Exit
மாவட்டம்