இலங்கைக்கும் நெதர்லாந்துக்குமிடையே இருபக்க விமான போக்குவரத்துச் சேவை உடன்படிக்கையொன்றைச் செய்வதற்குள்ளனர். இரண்டு நாடுகளுக்குமிடையே நேரடி விமான பயணிகள் மற்றும் பொருட்கள் விமானப் பயணங்களை ஆரம்பித்தல் இதன் குறிக்கோளாகும். இதன் ஊடாக இலங்கை மற்றும் நெதர்லாந்துக்குமிடையே சுற்றுலா, கல்வி, வர்த்தக, முதலீடு, விவசாயம் மற்றும் கலாச்சார தொடர்புகள் மேலும் முன்னேற்றம் அடையும் என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
இந்த விமான சேவை உடன்படிக்கையைச் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான ஆலோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் சுபீட்ச்சத்தின் செயற்பணி கொள்கை கூற்றுக்கு ஏற்ப பொருளாதார அபிவிருத்தியை இலக்கு வைத்து இந்த உடன்படிக்கைக்கு கையொப்பமிடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
1944 ஆம் ஆண்டில் கையொப்பமிட்ட சிகாகோ சமவாயத்திற்கு ஏற்ப இரண்டு நாடுகள் அல்லது பலவற்றுக்கிடையே சர்வதேச வர்த்தக விமான போக்குவரத்துச் சேவைகளை நடாத்திச் செல்வதற்கு விமான போக்குவரத்து சேவை உடன்படிக்கைகளுக்கு முற்படுதல் அத்தியாவசியமாகும். தற்பொழுது சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பில் பதிவு செய்யப்பட்டுள்ள நாடுகளின் எண்ணிக்கை 193 ஆகும். அந்த நாடுகளுடன் உடன்படிக்கைகளுக்கு முனைவதன் ஊடாக தேவையான சந்தர்ப்பங்களில் விமான சேவை செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு இயலும் என அமைச்சர் சுட்டிக் காட்டினார்.
இலங்கைக்கும் நெதர்லாந்துக்குமிடையே தூதுவராலய தொடர்புகள் ஆரம்பிக்கப்பட்டது 1951 ஆம் ஆண்டு தொடக்கமாகும். வாரமொன்றுக்கு இலங்கை மற்றும் நெதர்லாந்துக்குமிடையே 14 விமான பயணங்களை செயற்படுத்துவதற்கும் இது தொடர்பாக நடைபெற்ற ஆரம்ப கலந்துரையாடல்களில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கன் விமான போக்குவரத்துக் கம்பனி மற்றும் நெதர்லாந்தின் KLM Royal Dutch விமான சேவையும் இது தொடர்பாக ஈடுபடுத்திக் கொள்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேலும் குறிப்பிட்டார்.