கோவிட் பின்னரான புதிய பொதுமைப்படுத்தலின் கீழ் கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகளை நெறிப்படுத்துவதற்கான இணைந்த வேலைத்திட்டம் தயாரிக்கப்படுகின்றது. விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், இலங்கை சுங்கம், சுகாதாரத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன இணைந்து இந்த கூட்டு முயற்சிகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இன்று (22) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையர்கள் உட்பட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை குறைப்பதே இதன் நோக்கமாகும்.
கோவிட் தொற்றின் பின்னர் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய சாதாரணமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டின் எதிர்காலம் தொடர்பாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (22) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தலைமையில் கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான சேவை மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க, வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன மற்றும் விமான நிலையத்தில் குடிவரவு சுங்கம், சுகாதாரம் மற்றும் சுற்றுலாத்துறை அதிகாரிகளும் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான நிலையத்தின் அனைத்து பிரிவுகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் பயணிகளுக்கான இடையூறுகளை குறைக்க முடியும் என்றார். விமான நிலையத்தின் தலைவர் தலைமையில் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய கூட்டு முகாமைத்துவக் குழு ஒன்று கூடி இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டுமென அமைச்சர் பணிப்புரை விடுத்தார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு கருமபீடங்களில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்தப்பட்டது. விமான நிலையத்தில் அவசர நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஒப்புக்கொண்டார். சுற்றுலாப்பயணிகள், முதலீட்டாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விசேட குடிவரவு கருமபீடங்களை அறிமுகப்படுத்துமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பரிந்துரைத்தார். குடிவரவு அதிகாரிகளும் இதற்கு ஒப்புக்கொண்டனர். நவீன தொழில்நுட்பத்தின் அறிமுகத்துடன், வருகை முனையத்தில் குடிவரவு கருமபீடங்களின் எண்ணிக்கை 25 இல் இருந்து 31 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது மற்றும் குடியகல்வு சாளரங்களின் எண்ணிக்கை 18 இல் இருந்து 23 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாளாந்த நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பிலான நீண்ட கலந்துரையாடலின்போது, கோவிட் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள புதிய இயல்புநிலைப்படுத்தல் வேலைத்திட்டம் காரணமாக இந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் தலைவர் அசோக் பத்திரன வலியுறுத்தினார். இப்பிரச்சினைகளை விரைவாகத் தீர்ப்பதற்கும் தலைவர் ஒப்புக்கொண்டார். வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக வெளியேறும் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பிவரும் இலங்கையர்கள் தங்கு தடையின்றி விமான நிலையத்தில் தமது கடமைகளை மேற்கொள்வதற்காக விமான நிலையத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை அமைக்க வேண்டியதன் அவசியத்தை வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரத்ன வலியுறுத்தினார். அதற்கான வசதியை பெற்றுக் கொடுக்கலாமென விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுகாதார அறிக்கைகளை விரைவாக சேகரிக்கும் நடவடிக்கைகள் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டதுடன் அதன் முன்னேற்றமும் மீளாய்வு செய்யப்பட்டது. தாமதத்தை நீக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக தேவையான எண்ணிக்கையில் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் நாமல் ராஜபக்ச, அனைத்து நடவடிக்கைகளுக்கும் கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவது குறித்து அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருவதாக வலியுறுத்தியதோடு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் சுகாதாரத்துறை கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுக்க வேண்டுமெனவும், இது தொடர்பில் சட்டமா அதிபர் விளக்கமளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதன் மூலம் தினசரி பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், விமான நிலையத்தில் நாளாந்த பயணிகளின் எண்ணிக்கை 12,000ஐ தாண்டியுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமானது உலகின் கிழக்கு மற்றும் மேற்குப் வலயங்களை இணைக்கும் ஆசியாவின் விமானப் போக்குவரத்துச் சேவை நிலையமொன்றாக அபிவிருத்திச் செய்யும் முதலாவது படிமுறையைக் குறிக்கும் வகையில், விமான நிலைய விரிவாக்கச் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டமானது பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்று (25) முற்பகல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் சுப நேரத்தில் பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.
இந் நாட்டின் இரண்டாவது பாரிய அபிவிருத்தித் செயற்திட்டமாக கருதப்படும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய விரிவாக்கத் திட்டத்தின் நோக்கமானது இலங்கையின் அடையாளத்தை வெளிக்காட்டும் வகையில் சர்வதேச விமான ஓடுபாதைகளுக்கு இணைவாக புதிய திட்டத்திற்கு ஏற்ப விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதாகும்.
முழுமையான செயற்றிட்டம் பூர்த்தியடையும் போது , தற்போது ஆறு மில்லியனாக இருக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருடாந்த பயணிகளைக் கையாளும் திறனானது, பதினைந்து மில்லியன் பயணிகள் வரை அதிகரிப்பதற்கு இயலுமை கிடைக்கும்.
யப்பான் இலங்கை ஒருங்கிணைந்த செயற்றிட்டமொன்றான கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்யும் செயற்றிட்டத்தின் B - பொதி செயற்றிட்டத்திற்கு செலவு செய்யப்பட்டுள்ள மொத்தத் தொகை ரூபா 6 பில்லியன்கள் ஆகும். 2014 ஆம் ஆண்டின் போது பதவியில் இருந்த சனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும் யப்பானின் முன்னாள் பிரதமர் சின்ஹுவா அபே ஆகியோரின் தலைமைலும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தை விஸ்தரிப்புச் செய்யும் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
புதிய செயற்றிட்டம் முழுமையாக நிர்மாணிக்பட்டு நிறைவடையும் போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களை நிறுத்தி வைக்கும் தளங்களின் அளவு 49 வரை அதிகரிப்பதுடன் அதன் மூலம் தற்போதுள்ளது போன்று விமானங்களை நிறுத்தி வைக்கும் வசதி இரண்டு மடங்காக அதிகரிக்கும்.
இங்கு வெளியேறும் ஓடு பாதை நீளமாக்கப்படுவதால் விமானங்கள் புதிய முனைய கட்டடத்துக்குள் பிரவேசிக்க வசதிகள் வழங்கப்படும்.
B பொதியின் கீழ் தூரவுள்ள முனையம் பூர்த்தி செய்யப்பட்ட பின்னர் தற்போது காணப்படும் தளம் 269,000 கன மீட்டரிலிருந்து 479, 000 கன மீட்டர் வரை விரிவாக்கப்படுவதோடு, அதன் மூலம் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படும் கேள்விக்கும் மற்றும் விமானங்களை செயற்படுத்துவதற்கு உயர் வசதிகள் கிடைக்கும்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலைய விரிவாக்கத் திட்டமானது முழுமையாக நிறைவடையும் போது சோதனைக் கூடங்கள் 52 இலிருந்து 149 வரை அதிகரிக்கப்படுவதோடு குடிபெயர்வு கூடங்களின் எண்ணிக்கை 21 இலிருந்து 53 வரையும், குடிவரவு கூடங்களின் எண்ணிக்கை 27 இலிருந்து 83 வரையும் அதிகரிக்கப்படும்.
தற்போதுள்ள விமான பஸ்களுக்கான கதவுகளின் எண்ணிக்கை 6 இல் இருந்து 16 வரை அதிகரிப்பதோடு விமான நிலைய ஓய்வு அறைகளின் எண்ணிக்கை 4 இல் இருந்து 10 ஆக அதிகரிக்கப்படும்.
உலகில் கிழக்கையும் மேற்கையும் இணைக்கும் ஆசியாவின் விமான சேவைகள் மத்திய நிலையமாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இலங்கையின் அடையாளமாக வெளிக்காட்டும் வகையில் அபிவிருத்தி செய்வது மஹிந்த சிந்தனையினதும் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக் கூற்றினதும் முன்னுரிமை கொள்கையொன்றாகும். கட்டுநாயக்க விமானநிலைய விரிவாக்கத் செயற்றிட்டத்தின் இரண்டாம் கட்டம் பொதுமக்களின் பாவனைக்காக திறந்துவைக்கும் சந்தர்ப்பத்தில் யப்பானின் இலங்கைக்கான தூதுவர் ஹிடேகி மிசுகோஷி (Hideaki MIZUKOSHI) அவர்கள் மற்றும் சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விளையாட்டு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மற்றும் விமானப் போக்குவரத்து மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி. வி. சானக்க ஆகிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் நெரிசலைக் குறைப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அறிவூரைகளின் படி நேற்று (17) தொடக்கம் விமான நிலையத்தினதும் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒன்று சேர்ந்து விசேட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.
இதுவரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் உட்பட விமானப் பயணிகள் பாரியளவிலானவர்கள் இந்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் விமானப் பயணிகளின் சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் போது தாமதங்கள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்ததுடன்இ அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் உடனடியாக இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்துத் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அறிவூரைகள் வழங்கியிருந்தார்.
இதற்கமைய நேற்று (17) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கௌரவ சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம் பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திரு அசேல குணவர்தனஇ குடிவரவூ மற்றும் குடியகல்வூ கட்டுப்பாட்டாளர்இ சுங்க அதிகாரிகள் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வூபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி அவர்கள் உட்பட விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதன் போது தெரியவந்தது யாதெனில்இ அதிகளவில் விமானங்கள் வரும் நெருக்கடியான நேரத்தின் போதுஇ சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் கரும பீடத்திற்கு அண்மையில் அதிகளவில் பயணிகளின்; நெரிசல் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. போதுமானளவிலான உத்தியோகத்தர்களை இதன் பொருட்டு சுகாதார அதிகாரிகளினால் ஈடுபடுத்தாமை இதற்கான காரணம் எனவூம் தெரிய வந்ததது. இதன் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் தெரிவிக்கையில்இ கூடிய விரைவில் அடுத்து வரும் நாட்களில் புதிதாகச் சேவைக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் 30 உத்தியோகத்தர்கள் விமான நிலையத்தின் சேவைக்கு ஈடுபடுத்துவதாகத் தெரிவித்தார். அதுவரையில் விமான நிலையத்தின் அலுவலக ஆளணியினரில் 30 உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது. விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டிக்கு வருகை தரும் கொவிட் தடுப்ப+சியை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள் உட்பட விமானப் பயணிகளின் சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளைப் பரிசோதனை செய்வதற்கு வேறான சில கரும பீடங்களையூம் மற்றும் ஏனைய விமானப் பயணிகளுக்கு வேறான சில கரும பீடங்களை அறிமுகப்படுத்துவதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட விமானப் பயணிகள் தங்களது சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளை நிகழ்நிலை (ழுடெiநெ) முறை ஊடாகப் ப+ரணப்படுத்துவதற்கும் விமான நிலைய அதிகாரிகள் தேவையான வசதிகள் ஏற்படுத்தியூள்ளனர். விமான நிலையத்தின் இணையத் தளத்திற்குப் பிரவேசித்துஇ இச்சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளைப் ப+ரணப்படுத்த முடியூம். இவ்வாறு இவ்அறிக்கைகளைப் ப+ரணப்படுத்தி வருகை தரும் விமானப் பயணிகளுக்குத் தாமதமின்றி விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு இயலும் எனவூம்இ விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார்.
கலந்துரையாடலின் பின்னர் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் உள்ளடங்கிய குழுவினர் விமானப் பயணிகள் இந்நாட்டிக்கு வருகை தரும் சந்;தர்ப்பத்தின் போதுஇ இச்சுகாதார அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் கரும பீடங்களின் செயற்பாடுகளைப் பரிசீலனை செய்ததுடன்இ இரண்டு மணித்தியாலங்கள் அளவிலான நேரம் அங்கு தரித்து நின்று துரிதமாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை அத்தருணத்திலேயே மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையூம் காணக்கூடியதாகவிருந்தது.
கொவிட் தொற்று நோயின் பின்னர் நாடு திறக்கப்பட்டுஇ சுகாதார வழிகாட்டல்கள் தளர்த்தப்பட்டதுடன்இ நாளாந்தம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிகழும் பயணிகளின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் எண்ணிக்கை இதுவரையில் அதிகரித்துள்ளது. நாளாந்தம் விமானப் பயணிகள் செயற்பாட்டு நடவடிக்கைகளின் எண்ணிக்கை 12இ000 அளவில் விமான நிலையத்தில் நடைபெறுகின்றது. கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில்;; 746இ085 எண்ணிக்கையிலான விமானப் பயணிகளின செயற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 409இ496 எண்ணிக்கையானது வருகை தந்தவர்கள் என்பதுடன்இ 336இ589 எண்ணிக்கையிலானது இந்நாட்டிலிருந்து வெளியேறியவர்களாவர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் கொள்ளளவூ வருடாந்தம் 06 மில்லியன் ஆகும். கொவிட் தொற்று நோய் ஏற்படுவதற்கு முன்னர் இதனது வருடாந்த பயணிகளின் செயற்பாட்டு நடவடிக்கைகள் 10 மில்லியனை மிஞ்சியிருந்தது. தற்போது விமான நிலையத்தினுள் செயற்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் முடிவூற்றதன் பின்னர் இதனது பயணிகளின் செயற்பாட்டு நடவடிக்கைகள் வருடாந்தம் 15 மில்லியன் வரையில் அதிகரிப்பதற்கும் இயலும் எனவூம் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இதன் போது தெரியப்படுத்தினார்
- இந்தியன் ப்லொக் செயற்பாட்டாளர்களின் சந்திப்பின் போது பிரசன்ன ரணதுங்க கூறினார்.
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் தொடர்ந்து வரும் நாட்களில் நேரடி விமானப் பயணத் தடவைகளை அதிகரிப்பதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகஇ கௌரவ சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார். இந்தியாச் சுற்றுலாப் பயணிகளை இந்நாட்டிக்கு அதிகளவில் வரவழைக்கும் நோக்கில் இதனை நடைமுறைப்படுத்துவதாகவூம் அவர் தெரிவித்தார்.
இலங்கை விமான சேவைகள் நிறுவனத்தினால் இந்தியாவை இலக்காகக் கொண்டு செயற்படுத்தப்படும் விசேட ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் கீழ் நாட்டுக்கு வருகை தந்துள்ள இந்தியா ப்லொக் செயற்பாட்டாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை (19) இடம்பெற்ற சந்திப்பின் போது அமைச்சர் அவர்கள் இது பற்றிக் குறிப்பிட்டார். இந்தியன் ப்லொக் செயற்பாட்டாளர்கள் 50 பேரை இந்நாட்டுக்கு வரவழைத்துஇ இலங்கை தொடர்பாக விரிவான விளம்பரமொன்றை வழங்குவதற்கு இதன் மூலம் திட்டமிடப்பட்டுள்ளதுடன்இ தற்போதைக்கும் இதனது முதற் குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். முதற் குழுவிற்கு இந்தியன் ப்லொக் செயற்பாட்டாளர்கள் 25 பேர் உள்ளடங்குகின்றனர். இக்குழுவினர் யாலஇ கதிர்காமம் ஆகிய பிரதேசங்களில் கடந்த நாட்களில் சுற்றுலாவில் ஈடுபட்டனர் என்பதுடன்இ அவர்கள் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களை கொழும்பு சினமன் லேக் இல் இடம் பெற்ற நற்புறவூச் சந்திப்பின் போது சந்தித்திருந்தனர்.
கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இதன் போதுஇ இந்தியா இலங்கையின் 05 முதன்மையான சுற்றுலா விற்பனைச் சந்தைகளில் ஒன்றாகும் எனவூம் தெரிவித்தார். 2019 ஆண்டின்; போதுஇ இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் 18மூ வீதத்திற்கு அதிகமானவர்கள் இந்தியாச் சுற்றுலாப் பயணிகள் எனவூம் அவர்கள் சுட்டிக் காட்டினார். கொவிட் தொற்று நோயின் பின்னர் இலங்கை மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பொருட்டு திறந்ததுடன்இ இது வரையில் இந்நாட்டிக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் அதிகமானவர்கள் இந்தியன் இனத்தவர்கள் ஆவர். கடந்த 18 ஆந் திகதி வரையில் இலங்கைக்கு 85இ655 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 01 ஆந் திகதி தொடக்கம் 18 ஆந் திகதி வரையில் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ள 24இ567 சுற்றுலாப் பயணிகளில் 8086 பயணிகள் இந்தியா இனத்தவர்களாவர்.
கொவிட் தொற்றுநோய் பரவூவதற்கு முன்னர் இலங்கை விமான சேவை இந்தியாவின் 11 பிரதான நகரங்களுக்கு வாரத்திற்கு 100 இற்கும் அதிகமான எண்ணிக்கையான விமானப் பயணங்களை நடைமுறைப்படுத்தியதாகவூம்இ கொவிட் தொற்று நோயின் பின்னர் தொடர்ந்து வரும் நாட்களில் இவ்விமானப் பயணங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவூம் தெரிவித்த கௌரவ அமைச்சர் அவர்கள் இதற்கு மேலதிகமாக இந்தியாவிற்கு புதிய பல விமானப் பயணங்களின் பொருட்டும் புதிதாக விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாகவூம் தெரிவித்தார்.
இச்சந்தர்ப்பத்திற்கு விமான நிலையங்கள் மற்றும் ஏற்றுமதித் தயாரிப்பு வலய கௌரவ இராஜாங்க அமைச்சர் டீ.வீ. சானகஇ இலங்கை விமான சேவைகளின் தலைவர் திரு அஷோக் பதிரகே ஆகியோர் அடங்கிய குழுவினரும் இணைந்து கொண்டனர்.
பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகின்றது. இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் விமானத் தரையின் கொள்ளளவூ மற்றும் விமான ஓடு பாதையை விரிவாக்கம் செய்யூம் நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகவூம் சுற்றுலா அமைச்சர் திரு பிரசன்ன ரணதுங்க அவர்களால் தெரிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் பொருட்டு செலவிடப்படும் பணம் 220 மில்லியன் ரூபாயாகும்.
இதன் நிர்மாண நடவடிக்கைகள் அடுத்த வருடம் முதற் காலாண்டினுள் முடிவூறுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவூம் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். கருத்திட்டம் முடிவூற்றதன் பின்னர் விமான நிலையத்தின் தரைக் கொள்ளளவூ மற்றும் விமான ஒடு பாதையின் வினைத்திறன் தன்மையை 75மூ வீதமான அளவில் அதிகரிக்கலாம் எனவூம் எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்மலானை விமான நிலையத்தினுள் விமான கடற் வசதிகளுடனான கட்டுப்பாட்டு நிலையமொன்றையூம் மற்றும் விமானப் பயணக் கட்டுப்பாட்டு கோபுரமொன்றையூம் நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தக செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவூம் அரசாங்கம் அவதானத்தைச் செலுத்தியூள்ளதாகவூம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டியூள்ளார். 05 உள்ளுர் விமான சேவைகளுடன் புதிய வர்த்தக விமான சேவைகளும் தற்போதைக்கும் நடைமுறைக்கு வந்துள்ளது. இரத்மலானை விமான நிலையத்துடன் தொடர்புடைய விமான நிலையப் பயிற்சிப் பாடசாலையொன்றை ஆரம்பிக்கும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளதுடன்இ சர்வதேச திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை (ஐவெநசயெவழையெட ளுஉhநனரடநன ழுpநசயவழைளெ) ஆரம்பிக்கும் பொருட்டுத் தற்போதைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றது எனவூம் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டடுள்ளார்.
இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன்இ 1968 ஆம் ஆண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானப் பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பிராந்திய சர்வதேச விமானப் பயணங்கள் செயற்படவில்லை. இரத்மலானை விமான நிலையத்தினுள் நிலவூம் வளங்களைப் பயன்படுத்தி புதிய பிராந்திய சர்வதேச விமானப் பயணங்கள் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பிராந்திய விமானக் கேந்திர நிலையமாக மேம்படுத்துவதாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் கொள்கைக் கூற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமானப் பயணங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விமானங்களின் தரிப்பு மற்றும் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை ஒரு வருட காலத்தின் பொருட்டு நீக்குவதற்கும் விமானப் பயணிகளிடமிருந்து அறவிடப்படும் விமான நிலைய சேவைகள் வரியை ஒரு வருட காலத்தின் பொருட்டு இடைநிறுத்துவதற்கும்; அரசாங்கத்தினால் சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 05 பிரதான துறைகள் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளுர் விமான சேவைகளின் கேந்திர நிலையம்இ பொழுது போக்கு விமானப் பயண நிலையம்இ விமானப் பயற்சி நிலையம் என இதனை அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்டாகியூள்ளது. இதற்கு மேலதிகமாக அதிக வருமானம் பெறும் நபர்களை இலக்காகக் கொண்டு தனியார் விமானங்களை இலங்கைக்கு வரவழைப்பதை ஊக்குவிப்பதற்கும்இ தனியார் விமானங்களின் பொருட்டு தொழில்நுட்ப தரிப்புச் சேவைகள்இ விமானங்களின் பொருட்டு எரிபொருள் நிரப்புதல் போன்ற தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் இதன் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
Starting its promotional work for 2025, Sri Lanka Tourism Promotion Bureau (SLTPB) added another feather into its cap of endorsements, by being recognized as the most innovative Tourism Board promotion in Outbound Travel Mart (OTM) . In parallel to
Continue ReadingColombo, Sri Lanka – March 10, 2025 – The Sri Lanka Tourism Development Authority (SLTDA) successfully organized an event focused on facilitating investments in the tourism industry. The event which was attended by the Minister of Tourism Hon. Vijith
Continue Reading