மட்டக்களப்பு விமான நிலையம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காக கேளிக்கை சவாரிகளை (Joy Rides) அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அதன் முதல் கட்டம் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கேளிக்கை சவாரி ஒரு குறுகிய தூர விமானப் பயணமாகும். இது பயணிகளை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறது. அதன்படி, கடந்த வாரம் 03 விமானங்களிலிருந்து 36 பயணிகள் இக்கேளிக்கைப்பயணத்தில் இணைந்ததோடு, அவர்கள் மட்டக்களப்பு விமான நிலையத்தைச் சுற்றியுள்ள வான்பரப்பில் சுமார் அரை மணி நேரம் உலாவந்தனர்.

மட்டக்களப்பு விமான நிலையத்தை உள்நாட்டு விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் தொடக்கமாக இந்த கேளிக்கை சவாரித்திட்டம் செயற்படுத்தப்பட்டது. தற்போது மட்டக்களப்பு விமான நிலையத்தில் இயங்கும் இந்த விமான சவாரியானது, எதிர்காலத்தில் இரத்மலானை மற்றும் யாழ்ப்பாண விமான நிலையங்களில் செயற்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

1958 இல் சிவில் விமானப் போக்குவரத்துத் திணைக்களத்தினால் தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு விமான நிலையம், 1983 இல் விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த மகிந்த ராஜபக்ச சனாதிபதியின் அரசாங்கத்தின்போது (2012), மட்டக்களப்பு விமான நிலையத்தின் ஓடுபாதைகள் மேம்படுத்தப்பட்டு உள்நாட்டு விமான நிலையமாக இயங்கத் தொடங்கியது.

2018 ஆம் ஆண்டில் 1180 விமானச் செயற்பாடுகள் இடம்பெற்றன. 2019 இல் 864 விமானச் செயற்பாடுகளும், 2020 இல் கோவிட் தொற்றுநோய் சூழ்நிலையில் 174 விமானச் செயற்பாடுகளும் இடம்பெற்றன. 348 ஏக்கர் பரப்பளவு கொண்ட மட்டக்களப்பு விமான நிலையம் 1,368 மீட்டர் நீளமும் 30 மீட்டர் அகலமும் கொண்டதுடன், 60 விமானச் செயற்பாடுகளையும் கையாளக்கூடியது.

கோவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கொழும்பு - யாழ்ப்பாண விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். அதன்படி, அடுத்த மாத நடுப்பகுதியில் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் நாடு முடக்கப்படுவதற்கு முன், கொழும்பு-இரத்மலானை விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம்-பலாலி விமான நிலையத்திற்கு வாரத்திற்கு இரண்டு தடவை விமானங்கள் இயக்கப்பட்டன. கோவிட் தொற்றுநோய் காரணமாக அதை மீண்டும் ஆரம்பிக்க முடியவில்லை. சுகாதார வழிகாட்டுதல்களை கருத்தில் கொண்டு விமான சேவைகளை மீண்டும் தொடங்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தியுள்ளார். கோவிட் தொற்றுநோய் பரவுவதற்கு முன்னர் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு இடையில் வாரமிரு தடவை செயற்பட்ட இந்த உள்நாட்டு சேவையை, தினசரி  விமான சேவையாக மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கிடையில், கோவிட் தொற்றுநோய் காரணமாக இடைநிறுத்தப்பட்ட யாழ்ப்பாணம் - சென்னை நேரடி விமானங்களை விரைவாக மீண்டும் தொடங்குவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இச்சேவை சுகாதார வழிகாட்டுதல்களின்படி நடைமுறைப்படுத்தப்படும். யாழ்ப்பாணத்திலுள்ள பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தியிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது இது கோவிட் சூழ்நிலையால் தடைபட்டிருக்கின்றது. எதிர்காலத்தில் அது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும்.

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின்போது தாபிக்கப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏர் சிலோன் இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக மாறியதுடன், தென்னிந்திய நகரங்களுக்கு விமானங்களை இயக்கியது. 1980 க்குப் பிறகு பலாலி விமான நிலையத்தின் சேவைகள் புலிகளின் பயங்கரவாதத்தால் தடைபட்டதுடன், 2002 இல் அது விமானப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. விடுதலைப் புலிகளின்  பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின், 2010 இல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் இதனை சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.

ஏர்பிரான்ஸ் விமான சேவை நவம்பர் 05 முதல் இலங்கைக்கான வர்த்தக விமானங்களை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளது. அதன்படி, நவம்பர் 05 ஆம் தேதி முதல் பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கிடையே வாரத்திற்கு மூன்று நேரடி விமானங்களை இயக்க நிறுவனம் முன்வந்துள்ளதென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

பிரான்சின் பாரிஸ் நகரில் தற்போது நடைபெறும் சர்வதேச பிரெஞ்சு சுற்றுலா கண்காட்சியில் கலந்து கொண்ட ஏர் பிரான்ஸ் விமான சேவை பிரதிநிதிகளுக்கும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கும் இடையே நடந்த விஷேட கலந்துரையாடலின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டது. இந்த கலந்துரையாடல், கடந்த 05 ஆம் திகதி மேற்படி நிகழ்வின்போது இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் கண்காட்சி கூடத்தில் இடம்பெற்றது.

திட்டமிடப்பட்ட விமான சேவையை விரைவுபடுத்துவது மற்றும் ஏர் பிரான்ஸ் மூலம் இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விஷேட நிவாரணப் பொதியை வழங்குவது குறித்து இலங்கை மற்றும் பிரான்ஸ் தரப்புகளுக்கிடையே உடன்பாடொன்று எட்டப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார். அதன்படி, சம்பந்தப்பட்ட விஷேட நிவாரணப் பொதி நாட்டில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களுடன் கலந்தாலோசித்து செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க ஏர் பிரான்சும் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

ஏர் பிரான்ஸ் உலகின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றாகும். 1933 இல் நிறுவப்பட்ட இந்த விமான நிறுவனம் இந்த ஆண்டுக்கான Sky Trax உலக விமான போக்குவரத்து விருதை வென்றுள்ளது. ஏர் பிரான்ஸ் ஐரோப்பாவின் சிறந்த விமான நிறுவனமாகவும், சுகாதாரத்தின் அடிப்படையில் விஷேடமாக விரும்பப்படும் விமான நிறுவனமாகவும் பெயரிடப்பட்டுள்ளது.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடனான கலந்துரையாடலில், ஏர் பிரான்ஸ் பணிப்பாளர் நாயகம் (தூர விமான சேவை) Zoran Jelkic, ஆசிய பசிபிக் வர்த்தக அபிவிருத்தி பணிப்பாளர் Francois Giudicelli மற்றும் சுற்றுலாத்துறை செயலாளர் எஸ்.ஹெட்டியாராச்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

WhatsApp Image 2021 10 07 at 10.56.33

இந்த மாதத்திலிருந்து கிட்டத்தட்ட ஆயிரம் ரஷ்ய சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்ய சுற்றுலா பயணிகள் அக்டோபரில் மொஸ்கோவிலிருந்து கொழும்பு செல்லும் அனைத்து ஸ்ரீலங்கன் விமானங்களிலும் ஆசன முன்பதிவு செய்து வருகின்றனர். ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் அறிக்கையின்படி, இந்த விமானங்களுக்கான முன்பதிவு தற்போது நிறைவடைந்து வருகின்றது.

ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வாரத்திற்கொருமுறை நேரடி விமானத்தை இயக்குகின்கிறது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் யு.எல்.534 மொஸ்கோவிலிருந்து அக்டோபர் 09, அக்டோபர் 16, அக்டோபர் 23 மற்றும் அக்டோபர் 30 ஆகிய திகதிகளில் இலங்கைக்கு பயணிக்கவுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், ஜூலை 31 முதல் ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையே நேரடி விமான சேவையைத் ஆரம்பித்தது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை செப்டம்பர் 3 ஆம் திகதி ரஷ்யாவிற்கான ஒரு விஷேட சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அறிவுறுத்தலின் பேரில் இது செயல்படுத்தப்பட்டது. கோவிட் தொற்றுநோயால் இலங்கை வெளிநாடுகளில் சுற்றுலா ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை நிறுத்தி, ரஷ்யாவின் மொஸ்கோவில் நடந்த சுற்றுலா கண்காட்சியில் கலந்துகொண்டபோது அதை மீண்டும் தொடங்கியது. சுற்றுலாத்துறை அமைச்சர் உள்ளூர் ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இது தொடர்பில் பல சுற்றுக்களாக விஷேட கலந்துரையாடல்களை நடத்தினார்.

ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கானதொரு நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்துமாறு அமைச்சர் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, ஸ்ரீலங்கன் விமான சேவை 'Bye One Get One’ முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகை இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொள்ள வழிவகுக்கும்.

2019 இலேயே அதிக எண்ணிக்கையிலான ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்திருந்தனர். அந்த ஆண்டு இலங்கைக்கு வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 86,000 ஆகும். கோவிட் தொற்றுநோய் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், 2020 மார்ச் மாதம் வரை 49,397 ரஷ்ய சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு மாதங்களில் இலங்கைக்கு ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரத்மலான விமான நிலையம் 05 தசாப்தங்களுக்குப் பிறகு பிராந்திய மற்றும் சர்வதேச விமான சேவைகளைத் ஆரம்பிக்கவுள்ளது. முதலில் அட்டவணைப்படுத்தப்பட்ட விமானம், இரத்மலான விமான நிலையத்திலிருந்து அடுத்த மாத நடுப்பகுதியில் மாலைத்தீவுக்கு புறப்பட உள்ளது. அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் விமான சேவை மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பிரகாரம் இது செயல்படுத்தப்படவுள்ளது.

இரத்மலான சர்வதேச விமான நிலையம் 1938 இல் நிர்மாணிக்கப்பட்டதன் பின், 1968 முதல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயங்கியதால் பிராந்திய சர்வதேச விமானங்கள் இங்கு செயல்படவில்லை. இரத்மலானை விமான நிலையத்திலுள்ள வளங்களைப் பயன்படுத்தி, புதிய பிராந்திய சர்வதேச விமானங்களை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கை ஒரு பிராந்திய விமானங்களின் கேந்திரமையமாக அபிவிருத்தி செய்யப்படுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது கொள்கை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இரத்மலான விமான நிலையம் இந்தியா மற்றும் மாலைத்தீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்படும். மாலைத்தீவு விமானசேவையுடனான நீண்ட விவாதங்களுக்குப் பிறகு அவர்கள் இரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டனர். 50 பேர் பயணிக்கும் விமானம் கொழும்பு மற்றும் மாலைத்தீவு இடையே முதலில் பறக்கத் தொடங்கும். இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களை ஊக்குவிப்பதற்காக, ஒரு வருடத்திற்கான விமான நிறுத்தம் மற்றும் தரிப்பிட கட்டணங்களை நீக்கவும், பயணிகளிடமிருந்து விதிக்கப்படும் விமான நிலைய சேவை வரியை ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைக்கவும் அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்த பின்னர், இரத்மலான சர்வதேச விமான நிலையத்தை 05 துறைகளில் அபிவிருத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. இதனை உள்ளூர் விமான சேவை நிலையம், பொழுதுபோக்குக்கான விமானங்களின் மத்திய நிலையம் மற்றும் விமானப் பயிற்சி நிலையம் என கேந்திரப்படுத்தி அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் உயர் வருமானம் பெறும் நபர்களை இலக்கு வைத்து, இலங்கைக்கான தனியார் விமானங்களின் சேவைகளை ஊக்குவித்தல், தனியார் விமானங்களுக்கான தொழில்நுட்ப தரிப்பிட சேவை மற்றும் எரிபொருளை நிரப்புவதற்கான  சேவைகளை வழங்கல் என்பனவற்றை விரிவுபடுத்தவும் இதன்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Sri Lanka Tourism shows its colors at the Embassy Festival in Hague, Netherlands

Sri Lanka Tourism, in collaboration with the Embassy of Sri Lanka in the Hague, had the opportunity of showing that it’s a travel destination visiting at least for once in a lifetime, which spread the island destinations ‘uniqueness all across the Eu

Continue Reading

Sri Lanka Tourism Showcases Strong Presence at JATA Tourism Expo 2025 in Nagoya, Japan

Sri Lanka Tourism successfully participated in the JATA Tourism Expo 2025, an international travel fair held from 25th to 28th September 2025 at the Aichi Sky Expo (Aichi International Exhibition Center) in Nagoya, Japan. As one of Asia’s premier tra

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

Exit
மாவட்டம்