• இலங்கையை கவர்ச்சியான சுற்றுலா தளமாக மேம்படுத்துவதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சுடன் சுற்றுலா அமைச்சு இணைந்து புதிய நிகழ்ச்சித்திட்டமொன்று
  • இலங்கையில் தூதுவர்கள் ஒரு மாதத்திற்குள் செயற்பாட்டுத்திட்டமொன்றை கோருகின்றனர்.
  • வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவராலயங்களில் சுற்றுலா மேம்பாட்டு அலுவலர் ஒருவரை நியமிப்பதற்கு நடவடிக்கைகள்

இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளமாக மேம்படுத்துவதற்கு வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கையின் தூதுவராலயங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த செயற்பாட்டுத் திட்டமொன்றை தயார்  செய்யும். வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு, வெளிநாட்டுத் தொடர்புகள் இராஜாங்க அமைச்சு மற்றும் சுற்றுலா அமைச்சு என்பன ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தை செயற்படுத்தும். இலங்கைக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கொண்டு வருவதே இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் இலக்காகும்.

இதனோடு தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று நேற்று (01) ஆம் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.  சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, வெளிநாட்டு தொடர்புகள் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய  மற்றும் வெளிநாட்டு அலுவல்கள், சுற்றுலா ஆகிய அமைச்சுக்களின் உயர்மட்ட  அலுவலர்களின் பங்குபற்றலுடன்  வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலுக்கு  சகல வெளிநாடுகளிலுமுள்ள இலங்கை தூதுவர்கள்  zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் அந்தந்த நாடுகளில் இலங்கை தூதுவராலயங்களுக்கு இந்த மாத்தினுள் தாம் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாட்டுக்கே உரிய பிரகாரம் இலங்கை பற்றி பிரபல்யப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர், ஜீ.எல். பீரிஸ் அவர்கள் ஆலோசனை வழங்கினார். அந்த செயற்பாட்டுத் திட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அந்த நாடுகளில்  இலங்கையை பிரபல்யப்படுத்துவதற்கும் அந்தந்த நாட்டு தூதுவராலயங்களில் சேவையாற்றும் அலுவலர் ஒருவரை பெயர் குறித்து நியமிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. இலங்கையை பிரபல்யப்படுத்தும் முகமாக இந்நாட்டின் சுற்றுலா அமைச்சையும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும் ஒருங்கிணைப்புச் செய்தலும் அவ் அலுவலருக்கு சாட்டப்படும்.

வெளிநாடுகளில் இலங்கை தூதுவர்களின் தலைமையில் தாயர் செய்யப்படும் இந்த மேம்பாட்டு செயற்பாட்டுத்திட்டம் பற்றி சனவரி மாதத்தின் போது வெவ்வேறாக கலந்துரையாடி  அந்தந்த திட்டங்களை அமுல்படுத்துவதற்கு கால நேரத்தை ஈடுபடுத்திக் கொள்வதற்கும் இங்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்த மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தில் இலங்கையின் பலதரப்பட்ட பிரிவுகளின் மேம்பாடு தொடர்பாக “இலங்கையை” மேம்படுத்தும் தேவைகளை சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டினார். “இலங்கை” நாடொன்றாக வெளிநாடுகளில் பிரபல்யப்படுத்தப்படுதல் வேண்டும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் கூறினார்கள். இந்த ஒருங்கிணைந்த மேம்பாட்டு  நிகழ்ச்சித்திட்டத்தில் அது பற்றி  முக்கிய கவனம் செலுத்துவதற்கும் அமைச்சர்கள் தீர்மானித்தார்கள்.

இந்த நிகழ்வின் போது சுற்றுலா அமைச்சின் மேலதிக செயலாளர் தீபா சன்னசூரிய, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் கிமாலி பிரணாந்து, சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் முகாமை பணிப்பாளர் பத்மா வனிகசேகர ஆகியோர் கலந்து கொண்டனர்

WhatsApp Image 2021 12 02 at 10.34.18 1

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Korean Buddhist delegation shows Support and Solidarity for Sri Lanka

Sri Lanka Tourism, in collaboration with the Embassy of Sri Lanka to the Republic of Korea, is providing support for the two VVIP South Korean Buddhist delegations visiting the country, demonstrating solidarity and strengthening cultural and religiou

Continue Reading

After the Storm, Sri Lanka Shines Again – Luxury Cruise Brings 2,000 Tourists to Colombo

Colombo, December 2, 2025 – In a powerful symbol of resilience and recovery, Sri Lanka today welcomed the luxury cruise ship Mein Schiff 06, operated by TUI Cruises, carrying more than 2,000 international passengers to the Colombo Port. This marks th

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

Exit
மாவட்டம்