• சுற்றுலா முதலீடு தொடர்பாக அங்கிகாரத்தை வழங்கும் செயற்பாடுகளை துரிதப்படுத்துவதற்கு 8 அரச நிறுவனங்களுடன் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை புரிந்துணர்வு உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டுள்ளது.
  • கொவிட் தொற்றுநோய் நிலவிய கடந்த 2 வருடங்களின் போது இந்நாட்டுக்கு அமேரிக்க டொலர் 1013.67 மில்லியன் சுற்றுலா முதலீடுகள்.
  • அமேரிக்க டொலர் 300 மில்லியன் முதலீடு அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
  • எஞ்சிய முதலீடுகளையும் துரிதமாக அங்கிகரித்துக் கொள்வதற்கு நடவடிக்கை

கொவிட் தொற்றுநோய் நிலவிய கடந்த 2 வருடங்களின் போது இந்நாட்டுக்கு அமேரிக்க டொலர் 1013.67 மில்லியன் சுற்றுலா முதலீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். இந்த 2 வருடங்களின் போது கிடைத்த சுற்றுலா முதலீடுகளின் எண்ணிக்கை 99 ஆகும். இந்த மூதலீடுகளிலிருந்து அமேரிக்க டொலர் 300 மில்லியன் அளவிலான முதலீடுகள் அங்கிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு அங்கிகரிக்கப்பட்டுள்ள முதலீடுகளின் எண்ணிக்கை 59 என்றும் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.

சுற்றுலா முதலீடு தொடர்பாக அங்கிகாரம் வழங்கும் போது செயற்பாடுகளை துரிதப்படுத்தும் செயற்பாட்டின் கீழ் 8 அரச நிறுவனங்களுடன் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் கையொப்பமிடும் நிகழ்வுக்கு இன்று (26 ஆம் திகதி) முற்பகல் வருகை தந்த அமைச்சர் இது பற்றி குறிப்பிட்டார்.

சுற்றுலா முதலீடுகளை துரிதப்படுத்தும் நோக்கில் மத்திய சுற்றாடல் அதிகாரசபை, வனசீவராசிகள் திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், விவசாய அபிவிருத்தித் திணைக்களம், மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களம், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் போன்ற நிறுவனங்களுடன் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இந்த புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்துள்ளன. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதலீட்டுச் சபை கடலோரப் பாதுகாப்பு மற்றும் கடலோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களங்களுடனும் தற்பொழுது ஒப்பந்தங்களை கைச்சாத்திட்டுள்ளது. வர்த்தக கடற்படை செயலக அலுவலகம், சிவில் விமான சேவைகள் அதிகாரசபை, கொழும்பு மாநகர சபையுடன் எதிர்காலத்தில் உடன்படிக்கைகளைச் செய்வதற்கு உத்தேசித்துள்ளது. மேலும் இலங்கை மின்சார சபை, தேசிய நீர் வழங்கல் மற்றும் நீர் விநியோகச் சபையுடன் உரிய உடன்படிக்கைகளை கைச்சாத்திடுவதற்கும்  கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.

சுற்றுலா முதலீடுகளை துரிதப்படுத்துவதற்கு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை முதலீட்டு  தொடர்பு அலகாக புதிய அலகொன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த முதலீடுகள் தொடர்பாக அங்கிகாரம் வழங்கும் போது செயற்பாட்டில் உள்ள 15 அரச நிறுவனங்களுக்குத் தேவையான தகவல்கள் உள்ளடங்கிய பொதுவான விண்ணப்பப் படிவமொன்றும் தயார் செய்யப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் சுற்றுலா முதலீடுகளை அங்கிகரிக்கும் போது நடைமுறையில் இருந்த தாமதங்களை குறைப்பதற்கு அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு சுட்டிக் காட்டினார்கள். சுயமான சுற்றுலா முதலீட்டுச் செயற்றிட்ட முகாமைத்துவ முறைமையொன்று  தற்பொழுது தயார் செய்யப்பட்டு வருகின்றது. அதனை மே மாதத்தில் ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவும் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். இது தொடர்பாக பிரதேச மட்டத்தில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. மேம்படுத்தப்பட்ட செயற்பாடுகள் பற்றி உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு அறிவுறுத்தப்படுவதுடன் சுற்றுலா முதலீடுகளை அதிகரிக்கும் நோக்கில் பிரபல்யப்படுத்தும் விளம்பர நிகழ்ச்சித்திட்டமொன்று எதிர்காலத்தில் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் முதல் 2021 ஆண்டு திசம்பர் மாதம் வரை சுற்றுலா முதலீடுகள் 1,006 கிடைக்கப் பெற்றுள்ளது என சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு மேலும் சுட்டிக் காட்டினார். அதன் பெறுமதி அமேரிக்க டொலர் 7571.38 மில்லின்கள் ஆகும். எனினும், அக்காலத்தின் போது 457 முதலீடுகள் மாத்திரமே அங்கிகரிக்கப்பட்டுள்ளன. அமேரிக்க டொலர் 3,848.21 மில்லியன்கள் இவ்வாறு அங்கிகரிக்கப்பட்டுள்ளன. சுற்றுலா முதலீடுகளை அங்கிகரிக்கும் செயற்பாட்டில் காணப்பட்ட தாமத்த்தை நிவர்த்தி செய்வதற்கு  அரசு தனது உயர் முயற்சியுடன் நடவடிக்கைகளை  செய்து கொண்டிருப்பதாகவும் சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு மேலும் சுட்டிக் காட்டினார்கள். முறையான முதலீடுகளை அங்கிகரிக்கும் செயற்பாட்டின் ஊடாக நடபடிமுறைகள், கால வரையறைகள், கிரயம் மற்றும் தேவையான ஆவணங்களை குறைத்துக் கொள்ள முடியும் எனவும் சுற்றுலா அமைச்சின் செயலாளர் திரு. எஸ். ஹெட்டியாராச்சி அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். இது தொடர்பாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதாகவும் அவர் மேலம் குறிப்பிட்டார். சுற்றுலாக் கைத்தொழில் இந்நாட்டிற்கு மூன்றாவது உயர் வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித் தருகின்ற ஒரு மூலமாகும். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு சுற்றுலா முதலீடுகளை அதிகரிக்கும் தேவையை அரசு புரிந்துள்ளது என்றும் அது தொடர்பாக குறுங்கால, நடுத்தர கால மற்றும் நீண்டகால நிகழ்ச்சித்திட்டங்கள் அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

இந்தச் செயற்திட்டம் சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை மாற்றியமைக்கின்ற நிகழ்ச்சித்திட்டமொன்று என சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் திரு. தம்மிக விஜேசிங்க அவர்கள் கூறினார்கள். கொவிட் தொற்று நோயின் பின்னர் சுற்றுலாக் கைத்தொழில் மீண்டும் புத்துயிர் பெற்று வருகின்ற இச் சந்தர்ப்பத்தில் சுற்றுலாக் கைத்தொழில் தொடர்பாக சுற்றுலா முதலீடுகளையும் அதிகரித்தல் வேண்டும் என அவர்கள் மேலும் சுட்டிக் காட்டினார்கள். சுற்றுலா முதலீட்டை அங்கிகரிக்கும் செயற்பாட்டின் போது 43 அரச நிறுவனங்கள் உள்ளூராட்சி நிறுவனங்கள் மற்றும் பிரதேச செயலாளர் அலுவலகங்கள் என்பன சுற்றுலாத் துறையுடன் தொடர்புபடுவதுடன் அந்தந்த செயற்திட்டத்தின் பிரகாரம் ஒரு செயற்திட்டத்திற்கு 15 - 20 பிரதிநிதித்துவ நிறுவனங்களிடமிருந்து அங்கிகாரத்தை பெற்றுக் கொள்ள வேண்டியும் ஏற்படுகின்றது. இது தொடர்பாக விரயமாகும் காலத்தை குறைத்துக் கொள்வதற்கும் மூன்றாம்  தரப்பு தொடர்புபடுகின்றமையினால் ஏற்படுகின்ற மோசடி மற்றும் ஊழல்களை தவிர்த்துக் கொள்வதற்கும் புதிய நிகழ்ச்சித்திட்டங்கள் உதவி புரிகின்றது என சுட்டிக்காட்டப்பட்டது.

சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜயசிங்க அவர்களும் இந் நிகழ்வின் போது உரையாற்றினார்கள்.

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் திரு எஸ். அமரசிங்க, அதன் பணிப்பாளர் சபையின் அங்கத்தவர் கலாநிதி திரு ஏ.ஜீ. அமரசங்க,  வனசீவராசிகள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு சந்தன சூரியபண்டார, வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் வனப் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் ஜெனரால் கலாநிதி திரு கே.எம்.ஏ. பண்டார, தேசிய கட்டிட ஆராய்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் (கலாநிதி) திரு ஆசிரி கருணாவர்தன, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் திரு. கே.டீ.என். சிரிவர்தன, விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு பாலித நாயக்கார, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் திரு தம்மிக விஜெசிங்க என்போர்கள் உரிய உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டனர்.

 

WhatsApp Image 2022 01 26 at 14.12.18

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

SLCB Organizes Knowledge-Enriching Forum on the Role of Digital Marketing in Advancing Business and MICE Events

SLCB Organizes Knowledge-Enriching Forum on the Role of Digital Marketing in Advancing Business and MICE Events

Exit
மாவட்டம்