• பொருளாதார பிரச்சினைகளினால் ஏற்பட்டுள்ள அழுத்தம் எதிர்வரும் சனவரி மாதமளவில் வீழ்சியடையும் என மத்திய வங்கியின் ஆளுநர் நம்பிக்கை தெரிவிக்கின்றார்......
  • சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் கடன் சலுகைப் பொதியை நீடிப்புச் செய்வது தொடர்பாக கவனம் .......
  • கடன் மறுசீரமைப்புச் செய்வதற்கு திட்டங்கள்.....
  • சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்கின்ற குத்தகை கம்பனிகளுக்கு எச்சரிக்கை
  • குத்தகை தவணை சலுகை வழங்கி தவணைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் அறிவிக்கவும்............ மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிடுகின்றார்......

பொரளாதாரப் பிரச்சினை காரணமாக  ஏற்பட்டுள்ள அழுத்தமானது எதிர்வரும் சனவரி மாதமளில் வீழ்ச்சியடையும் என மத்திய வங்கியின் அதிபதி அஜித் கப்ரால் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார். கொவிட் தொற்றுநோயுடன் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பிரச்சினையின் காரணமாக தற்பொழுது நாட்டின் சகல துறைகளும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  அந்த அழுத்தம் எதிர்வரும் சனவரி மாதம் வரை உச்ச அளவில் நிலவும் என்றும் அதன் பின்னர் அது படிப்படியாக வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக இன்று (24) மத்திய வங்கி கேட்ப்போர் கூடத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது மத்திய வங்கியின் ஆளுநர் இது பற்றி குறிப்பிட்டார். இந்த கலந்துரையாடல் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க நடைபெற்றது. சுற்றுலா அமைச்சின் கீழ் செயற்படும் சுற்றுலா, சிவில் விமான சேவைகள், விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள், சிறிலங்கன் போன்ற நிறுவனங்கள் தற்பொழுது முகங்கொடுக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக இங்கு விரிவாக கவனம் செலுத்தப்பட்டது.

சசுற்றுலாத்துறை இயல்பு நிலைக்கு  திரும்பும் வரை அத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள  நிவாரணத்தை நீடிப்புச் செய்யுமாறு மத்திய வங்கியின் ஆளுநரிடம் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு கேட்டுக் கொண்டார்கள். சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ளவர்கள் பெற்றுள்ள கடன்களை மறுசீரமைப்புச் செய்யுமாறு கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக் காட்டினார். அதற்கு பதில் வழங்கிய மத்திய வங்கியின் ஆளுநர் அது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். உரிய கடன் பெறுநர்களின்  கோரிக்கையுடன் கூடிய பிரேணையொன்று உரிய வங்கிக்குச் சமர்ப்பிக்கப்பட்டு அதனைப் பெற்றுக் கொள்வதற்கும் அவ்வாறான கடனாளிகளுக்கு தேவையாயின் மத்திய வங்கியின் ஊடாக சிபாரிசொன்றை வழங்குவதற்கும் இயலுமை உண்டு என அவர்கள் குறிப்பிட்டார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு மேலும் குறிப்பிட்டது சுற்றுலா துறையில் ஈடுபட்டுள்ளவர்களின் வாகன குத்தகைக் கம்பனிகளினால் பறிமுதல் செய்யும் நிகழ்வுகள் அறிக்கையிடப்பட்டுள்ளது என்றாகும். மேலும், உரிய குத்தகைக் கம்பனிகள் குத்தகை நிவாரணத்தை வழங்கும் போத தவணைப் பணத்துடன் மேலுமொரு தொகையை இணைக்கும் நிகழ்வுகளும் அறிக்கையிடப்பட்டுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார். அதற்கு பதில் வழங்கும் போது மத்திய வங்கியின் ஆளுநர்  அஜித் கப்ரால் அவர்கள் குறிப்பிட்டதாவது குத்தகை கம்பனிகளுக்கு வாகனங்களை பறிமுதல் செய்வதை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்றாகும். குத்தகை நிவாரணத்தை வழங்கும் போது தவணைக்கு மேலதிகமான தொகையொன்றை சேர்ப்பதற்கு ஒரு போதும் அனுமதி இல்லை என குறிப்பிட்ட மத்திய வங்கியின் ஆளுநர் மத்திய வங்கி ஆளுநர் குத்தகை கம்பனிகள்  வாகனங்களை பறிமுதல் செய்தல்  மற்றும் மேலதிக தொகைகளைச் சேகரிக்கும் நிகழ்வுகள் இருப்பின் அது தொடர்பாக உடனடியாக மத்திய வங்கிககு அறிவுறுத்துமாறு சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டது. அவ்வாறான நிகழ்வுகளுடன் தொடர்பான குத்தகை கம்பனிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கடந்த காலத்தில்  ரூபா. 4,100 பில்லியன் கடன் சலுகை வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த 21 நாட்களுக்குள் சுற்றுலாப் பிரயாணிகள் 29,000 இந் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் இந்த வருட முடிவடையும் போது 150,000 இற்கும் 180,000 இற்கும் இடைப்பட்ட சுற்றுலாப் பிரயாணிகள் வருகை தந்திருக்கலாம் என எதிர்பார்த்ததாக குறிப்பிட்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் எதிர் வரும் ஆண்டாகும் போது இந்த நாட்டின் சுற்றுலா தொழில் முயற்சி இயல்பு நிலைக்கு திரும்பும்  என தான் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அபிவிருத்தி செயற்றிட்டங்களை அமுல்படுத்தும் போது புதிய இயல்பு நிலைமையின் கீழ் அமுலில் உள்ள சட்டதிட்டங்களினால் தடைகள் ஏற்படுவதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் கம்பனியின் உப தலைவர் ரஜீவ சூரியஆரச்சி அவர்கள் குறிப்பிட்டார்கள். அது தொடர்பாக இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டதாவது நிதி அமைச்சுடன் கலந்துரையாடி அப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கு துரிதமாக நடவடிக்கை எடுப்பதாக என்றாகும்.

சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி அவர்கள், வினமான நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி செயன்முறைப்படுத்தும் வலயங்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மாதவ தேவசுரேந்திர, சிவில் விமான சுவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் கம்பனியின் உப தலைவர் ரஜீவ சூரியஆரச்சி, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் தம்மிக்க விஜேசிங்க, மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் ரீ.எம்.ஜே.வை.பி. பிரணாந்து உள்ளடங்கலாக அலுவலர்கள் பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

 

0 1 1

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Australian Influencers to Showcase Sri Lanka’s Wonders to Millions Worldwide

As part of a renewed effort to position Sri Lanka as a top long-haul destination for Australian travelers, the Sri Lanka Tourism Promotion Bureau (SLTPB) is organizing a special influencer familiarization tour featuring four prominent Australian

Continue Reading

Sri Lanka Convention Bureau launch educational drive to University Students to elevate Sri Lanka’s MICE industry to new heights

Sri Lanka Convention Bureau (SLCB) the gateway to seamless event planning and execution in Sri Lanka, elevates Sri Lanka’s MICE industry marking a significant milestone for the Meetings, Incentives, Conferences, Events and Exhibitions (MICE) sector i

Continue Reading

எதிர்வரும் நிகழ்வுகள்

Exit
மாவட்டம்