பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யப்படும் இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படுகின்றது. இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தின் விமானத் தரையின் கொள்ளளவூ மற்றும் விமான ஓடு பாதையை விரிவாக்கம் செய்யூம் நடவடிக்கைகள் தற்போது நடைமுறைப்படுத்தப்படுவதாகவூம் சுற்றுலா அமைச்சர் திரு பிரசன்ன ரணதுங்க அவர்களால் தெரிவிக்கப்பட்டது. கடந்த மே மாதம் ஆரம்பிக்கப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தின் பொருட்டு செலவிடப்படும் பணம் 220 மில்லியன் ரூபாயாகும்.
இதன் நிர்மாண நடவடிக்கைகள் அடுத்த வருடம் முதற் காலாண்டினுள் முடிவூறுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாகவூம் அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார். கருத்திட்டம் முடிவூற்றதன் பின்னர் விமான நிலையத்தின் தரைக் கொள்ளளவூ மற்றும் விமான ஒடு பாதையின் வினைத்திறன் தன்மையை 75மூ வீதமான அளவில் அதிகரிக்கலாம் எனவூம் எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்மலானை விமான நிலையத்தினுள் விமான கடற் வசதிகளுடனான கட்டுப்பாட்டு நிலையமொன்றையூம் மற்றும் விமானப் பயணக் கட்டுப்பாட்டு கோபுரமொன்றையூம் நிர்மாணிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இரத்மலானை சர்வதேச விமான நிலையத்தில் வர்த்தக செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பாகவூம் அரசாங்கம் அவதானத்தைச் செலுத்தியூள்ளதாகவூம் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டியூள்ளார். 05 உள்ளுர் விமான சேவைகளுடன் புதிய வர்த்தக விமான சேவைகளும் தற்போதைக்கும் நடைமுறைக்கு வந்துள்ளது. இரத்மலானை விமான நிலையத்துடன் தொடர்புடைய விமான நிலையப் பயிற்சிப் பாடசாலையொன்றை ஆரம்பிக்கும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளதுடன்இ சர்வதேச திட்டமிடப்பட்ட செயற்பாடுகளை (ஐவெநசயெவழையெட ளுஉhநனரடநன ழுpநசயவழைளெ) ஆரம்பிக்கும் பொருட்டுத் தற்போதைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகின்றது எனவூம் அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டடுள்ளார்.
இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன்இ 1968 ஆம் ஆண்டு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானப் பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பிராந்திய சர்வதேச விமானப் பயணங்கள் செயற்படவில்லை. இரத்மலானை விமான நிலையத்தினுள் நிலவூம் வளங்களைப் பயன்படுத்தி புதிய பிராந்திய சர்வதேச விமானப் பயணங்கள் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இலங்கையைப் பிராந்திய விமானக் கேந்திர நிலையமாக மேம்படுத்துவதாக அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களின் கொள்கைக் கூற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரத்மலானை விமான நிலையத்தில் சர்வதேச விமானப் பயணங்களை ஊக்குவிக்கும் பொருட்டு விமானங்களின் தரிப்பு மற்றும் தரித்து வைப்பதற்கான கட்டணங்களை ஒரு வருட காலத்தின் பொருட்டு நீக்குவதற்கும் விமானப் பயணிகளிடமிருந்து அறவிடப்படும் விமான நிலைய சேவைகள் வரியை ஒரு வருட காலத்தின் பொருட்டு இடைநிறுத்துவதற்கும்; அரசாங்கத்தினால் சமீபத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 05 பிரதான துறைகள் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளுர் விமான சேவைகளின் கேந்திர நிலையம்இ பொழுது போக்கு விமானப் பயண நிலையம்இ விமானப் பயற்சி நிலையம் என இதனை அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்டாகியூள்ளது. இதற்கு மேலதிகமாக அதிக வருமானம் பெறும் நபர்களை இலக்காகக் கொண்டு தனியார் விமானங்களை இலங்கைக்கு வரவழைப்பதை ஊக்குவிப்பதற்கும்இ தனியார் விமானங்களின் பொருட்டு தொழில்நுட்ப தரிப்புச் சேவைகள்இ விமானங்களின் பொருட்டு எரிபொருள் நிரப்புதல் போன்ற தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்கும் இதன் கீழ் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.