மத்தள சர்வதேச விமன நிலையம் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளின் பிரயாணத்தளமாக மேம்படுத்தப்படும். அது தொடர்பாக சர்வதேச விமானக் கம்பனிகள் மற்றும் வியாபார ஜெட் விமானங்களை கவரும் விசேட நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள்.
மத்தள விமனா நிலையம் சர்வதேச விமானங்களை கவர்வதற்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. மத்தள விமான நிலையம் இறக்குமதி வரியான அமேரிக்க டொளர் 60 ஐ இரண்டு வருடங்களுக்கு பெற்றுக் கொள்வதை இடைநிறுத்தியுள்ளதுடன் தரையிறக்கும் மற்றும் தரித்து வைப்பதற்கான கட்டணங்களிலும் விமானக் கம்பனிகளுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. மிகவும் வசதிபடைத்த வியாபார பிரமுகர்களை கவர்வதன் ஊடாக வியாபார ஜெட் விமானங்களை தருவித்துக் கொள்வதற்கு கலந்துரையாடல் சுற்றுக்கள் பல நடாத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தீர்வை வரியற்ற கடைத் தொகுதிகளை நடாத்திச் செல்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதுடன் தொடர்பாடல் சேவைகள் மற்றும் வங்கி கரும பீடங்களையும் பேணிச் செல்வதற்கும் தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்பொழுது மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு மாலைதீவு, கட்டார், எயார் ஏசியா ஆகிய விமான சேவைகள் நேரடி விமான பயணங்களை மேற்கொள்கின்றன. மேலும் பல சர்வதேச விமான சேவைகள் எதிர்வரும் வருடத்தில் மத்தள புதிய விமான நிலையத்துடன் செயற்படுத்தல்களை ஆரம்பிப்பதற்கு விருப்பத்தைத் தெரிவித்துள்ளன. அவர்களுடன் தற்பொழுது கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் கூறினார். சலாம் எயார் விமான கம்பனி தனது சரக்கு கையாள்கைகளை ஆரம்பித்துள்ளதுடன் எமிரேட்ஸ் விமானக் கம்பனி மிக அண்மையில் தனது சரக்கு கையாள்கைகளை மத்தள விமான நிலையத்தில் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. மேலும், கடற்படை பதவியணி பரிமாற்றம் செய்தல் தொடர்பாக கேந்திர நிலையமாகவும் மத்தள விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டார் விமானக் கம்பனி மற்றும் எயார் ஏசியா கம்பனி என்பன தற்பொழுது தமது கையாள்கைகளை மத்தளை விமான நிலையத்துடன் செயற்படுத்துகின்றன. 2020 பெப்புருவரி மாதம் முதல் இந்திய பிராந்தியம் மூடப்பட்டமையின் காரணமாக கடல் பதவியணி பரிமாற்றம் தொடர்பாக இந்தச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாக அமைச்சர் கூறினார்.
அதே வேளை மத்தள விமான நிலையத்தில் விமானங்களின் பராமரிப்பு மற்றும் திருத்தம் செய்யும் வசதிகளை தாபிக்கும் பணிகள் தொடர்பாக அரசின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன் பிரகாரம், விசேட முதலீடொன்றின் ஊடாக அல்லது இலங்கைக் கம்பனியுடன் ஒருங்கிணைந்த தொழில்முயற்சியாக அதனை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அது தொடர்பாக மேலும் பல படிமுறைகள் எடுக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மத்தள விமான நிலையம் இந்த ஆண்டின் முதல் 09 மாத காலத்தின் போது 518 விமான பிரயாணங்களை மேற்கொண்டுள்ளன. 27,859 பிரயாணிகளுக்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கையாப்பட்ட விமான சரக்கின் அளவு மெற்றிக் டொன் 21.5 ஆகும். முன்னைய வருடத்தின் முதல் 09 மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பிரயாணிகளின் கையாள்கையில் 52% அதிகரிப்பொன்றாகும். சரக்கு கையாள்கையில் 106% அதிகரிப்பொன்றும் காணப்பட்டதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.