- இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளமாக மேம்படுத்தும் முகமாக எமிரேட்ஸ் விமானக் கம்பனிக்கும் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்குமிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாதிடப்பட்டுள்ளது.
- இலங்கையை சுற்றுலா தொடர்பாக மேம்படுத்துவதற்கு சர்வதேச விமானக் கம்பனிகள் பலவற்றுடன் எதிர்காலத்தில் உடன்படிக்கைகளைச் செய்வதற்கு முனைவோம்.
-கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா பயணத்தளமாக மேம்படுத்துவதற்கு எமிரேட்ஸ் விமானக் கம்பனி மற்றும் இந்நாட்டின் சுற்றுலா மேம்பாட்டு பணியகத்திற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றுக்கு கையொப்பமிடப்பட்டுள்ளது. இந்த உடன்படிக்கை டுபாயில் அமைந்துள்ள எமிரேட்ஸ் தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (04) ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டது. சுற்றுலா மேம்பாட்டு பணியகம் சார்பாக அதன் தலைவர் கிமாலி பிரணாந்து மற்றும் எமிரேட்ஸ் விமானச் சேவைக் கம்பனியின் மேற்கத்தேய ஆசியா மற்றும் இந்திய சமுத்திர பிராந்திய வர்த்தக செயற்பாடுகள் தொடர்பான சிரேட்ட உப தலைவர் Ahamad Khoory ஆகியோர் அந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
எமிரேட்ஸ் விமானச் சேவைகள் கம்பனி 30 வருடங்களுக்கு அதிகமான காலம் முதல் இலங்கைக்கு விமானச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. அக் கம்பனி இலங்கைக்கு முதலாவதாக விமானப் பயணங்களை ஆரம்பித்தது 1986 ஆண்டு ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதியாகும். எமிரேட்ஸ் கம்பனி கொவிட் தொற்று நோய்க் கால எல்லையின் போது இலங்கைக்கு விமானப் பயணங்களை மேற்கொண்ட உலகின் முன்னணி விமானக் கம்பனியொன்றாகும். 2021 ஆம் ஆண்டு சனவரி மாதம் 26 ஆம் திகதி முதல் இலங்கை மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்து விடப்பட்டதைத் தொடர்ந்து எமிரேட்ஸ் விமான சேவையினால் விமான பயணிகள் 50,000 பேருக்கு அண்மித்த தொகையினர் இந்நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக விமான நிலைய அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள், இத்தாலி, ஐக்கிய இராச்சியம் மற்றும் ஜேர்மனி போன்ற நாடுகளிலிருந்து இந்த விமானப் பயணிகள் வருகை தந்துள்ளனர். வாரமொன்றுக்கு எமிரேட்ஸ் விமானங்கள் 21 தற்பொழுது கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தருகின்றன. புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு ஏற்ப எதிர்காலத்தில் சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் மற்றும் எமிரேட்ஸ் விமானக் கம்பனிக்குமிடையே ஒருங்கிணைந்த மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்று அமுல்படுத்தப்படுகின்றது. சுற்றுலா கண்காட்சிகள், மாநாடு, கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் சுற்றுலா மேம்பாடுகள் போன்றவற்றை இதன் கீழ் ஏற்பாடு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி சர்வதேச விமானக் கம்பனிகளுடன் எதிர்காலத்தில் இலங்கையை மேம்படுத்தும் ஒருங்கிணைந்த நிகழ்ச்சித்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுவதாக இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் சந்தர்ப்பத்திற்கு சமூகமளித்த சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த ஆண்டில் சர்வதேச விமானக் கம்பனிகள் பல புதிதாக இலங்கைக்கு விமானப் பயணங்களை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் அது தொடர்பாக உரிய விமானச் சேவைகளுடன் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்கள்.
எமிரேட்ஸ் விமானக் கம்பனியுடன் இவ்வாறு இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளமொன்றாக மேம்படுத்துவதற்கு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றைச் செய்வதானது இந்நாட்டின் சுற்றுலா கைத்தொழில் துறையில் விசேடமான கட்டமொன்று என்றும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். கொவிட் தொற்று நோயினால் வீழ்ச்சியடைந்த இந்நாட்டின் சுற்றுலாக் கைத்தொழிலை இயல்பு நிலைக்கு மாற்றியமைக்கும் போது விமானச் சேவைகளின் ஒத்துழைப்பு தேவையானது என்றும் அந்த ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.