வரலாற்றில் முதன் முறையாக விமான நிலைய மற்றும் விமான சேவைக் கம்பனி விமான நிலைய தள கையாள்தல்களை ஆரம்பிக்கின்றது (ground handling). அதன் பிரகாரம் இன்று (25) ஆம் திகதி முதல் இரத்மலான விமான நிலைலயத்தில் விமான நிலைய தள கையாள்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது அக் கம்பனியினால் ( ground handling) ஆகும்.
இன்று அதிகாலை 11.45 மணிக்கு மாலைதீவிலிருந்து வருகை தந்த விமானமொன்றுக்கு முதலாவதாக தள கையாள்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக இரத்மலான விமான நிலைய முகாமையாளர் அருண ராஜபக்ஷ அவர்கள் குறிப்பிட்டார்கள். இதற்கு முன்னர் இரத்மலான விமான நிலையத்தில் நில கையாள்தல் செயற்பாடுகள் ( ground handling) மேற்கொள்ளப்பட்டது சிறி லங்கன் கம்பனியினால் ஆகும். விமான நிலைய மற்றும் விமான சேவை கம்பனிக்குரிய சட்டத்தின் ஊடாக அது தொடர்பாக அதிகாரம் வழங்கப்பட்டிருந்த போதும் இதுகால வரை அது செயற்படுத்தப்படவில்லை. சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் டீ.வீ. சானக ஆகிய அமைச்சர்களின் தலையீட்டுடன் இரத்மலான விமான நிலையத்தில் தள கையாள்தல் செயற்பாடுகள் விமான நிலைய மற்றும் விமான சேவை கம்பனியால் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இரத்மலான விமான நிலையத்தில் கால அட்டவணையிடப்பட்ட சர்வதேச விமான செயற்பாடுகள் எதிர்வரும் ஞாயிறு முதல் ஆரம்பிக்கப்படுவதுடன் அந்த விமான கையாள்தல் தொடர்பாக நில கையாள்தல் செயற்பாடுகளை மேற்கொள்வது விமான நிலைய மற்றும் விமானச் சேவைகள் கம்பனியின் ஊடாகவாகும். கொழும்பு மற்றும் மாலைதீவுக்கிடையே இந்தச் செயற்பாடுகள் கால அட்டவணையிடப்பட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றது. இரத்மலான விமான நிலையத்தில் சர்வதேச விமான நிலக் கையாள்தல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவது 55 வருடங்களின் பின்னராகும்.