கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் நெரிசலைக் குறைப்பதற்கு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அறிவூரைகளின் படி நேற்று (17) தொடக்கம் விமான நிலையத்தினதும் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் ஒன்று சேர்ந்து விசேட பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் தெரிவித்தார்.

இதுவரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் உட்பட விமானப் பயணிகள் பாரியளவிலானவர்கள் இந்நாட்டிற்கு வருகை தருகின்றனர். இவ்வாறு வருகை தரும் விமானப் பயணிகளின் சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் போது தாமதங்கள் ஏற்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றிருந்ததுடன்இ அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் உடனடியாக இது தொடர்பாக ஆராய்ந்து பார்த்துத் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி அறிவூரைகள் வழங்கியிருந்தார்.

இதற்கமைய நேற்று (17) கட்டுநாயக்க விமான நிலையத்தில் கௌரவ சுற்றுலா அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களின் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று இடம் பெற்றது. இக்கலந்துரையாடலுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் திரு அசேல குணவர்தனஇ குடிவரவூ மற்றும் குடியகல்வூ கட்டுப்பாட்டாளர்இ சுங்க அதிகாரிகள் மற்றும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வூபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி அவர்கள் உட்பட விமான நிலைய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது தெரியவந்தது யாதெனில்இ அதிகளவில் விமானங்கள் வரும் நெருக்கடியான நேரத்தின் போதுஇ சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் கரும பீடத்திற்கு அண்மையில் அதிகளவில் பயணிகளின்; நெரிசல் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. போதுமானளவிலான உத்தியோகத்தர்களை இதன் பொருட்டு சுகாதார அதிகாரிகளினால் ஈடுபடுத்தாமை இதற்கான காரணம் எனவூம் தெரிய வந்ததது. இதன் போது சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் தெரிவிக்கையில்இ கூடிய விரைவில் அடுத்து வரும் நாட்களில் புதிதாகச் சேவைக்குச் சேர்த்துக்கொள்ளப்படும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள்  30 உத்தியோகத்தர்கள் விமான நிலையத்தின் சேவைக்கு ஈடுபடுத்துவதாகத் தெரிவித்தார். அதுவரையில் விமான நிலையத்தின் அலுவலக ஆளணியினரில் 30 உத்தியோகத்தர்களை ஈடுபடுத்தி இந்நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது. விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டிக்கு வருகை தரும் கொவிட் தடுப்ப+சியை முழுமையாகப் பெற்றுக் கொண்டுள்ள சுற்றுலாப் பயணிகள் உட்பட விமானப் பயணிகளின் சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளைப் பரிசோதனை செய்வதற்கு வேறான சில கரும பீடங்களையூம் மற்றும் ஏனைய விமானப் பயணிகளுக்கு வேறான சில கரும பீடங்களை அறிமுகப்படுத்துவதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் உட்பட விமானப் பயணிகள் தங்களது சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளை நிகழ்நிலை (ழுடெiநெ) முறை ஊடாகப் ப+ரணப்படுத்துவதற்கும் விமான நிலைய அதிகாரிகள் தேவையான வசதிகள் ஏற்படுத்தியூள்ளனர். விமான நிலையத்தின் இணையத் தளத்திற்குப் பிரவேசித்துஇ இச்சுகாதாரம் தொடர்பான அறிக்கைகளைப் ப+ரணப்படுத்த முடியூம். இவ்வாறு இவ்அறிக்கைகளைப் ப+ரணப்படுத்தி வருகை தரும் விமானப் பயணிகளுக்குத் தாமதமின்றி விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கு இயலும் எனவூம்இ விமான நிலைய மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் அவர்கள் இதன் போது சுட்டிக் காட்டினார்.

கலந்துரையாடலின் பின்னர் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் உள்ளடங்கிய குழுவினர் விமானப் பயணிகள் இந்நாட்டிக்கு வருகை தரும் சந்;தர்ப்பத்தின் போதுஇ இச்சுகாதார அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளும் கரும பீடங்களின் செயற்பாடுகளைப் பரிசீலனை செய்ததுடன்இ இரண்டு மணித்தியாலங்கள் அளவிலான நேரம் அங்கு தரித்து நின்று துரிதமாக மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை அத்தருணத்திலேயே மேற்கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதையூம் காணக்கூடியதாகவிருந்தது.

கொவிட் தொற்று நோயின் பின்னர் நாடு திறக்கப்பட்டுஇ சுகாதார வழிகாட்டல்கள் தளர்த்தப்பட்டதுடன்இ நாளாந்தம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிகழும் பயணிகளின் செயற்பாட்டு நடவடிக்கைகளின் எண்ணிக்கை இதுவரையில் அதிகரித்துள்ளது. நாளாந்தம் விமானப் பயணிகள் செயற்பாட்டு நடவடிக்கைகளின் எண்ணிக்கை 12இ000 அளவில் விமான நிலையத்தில் நடைபெறுகின்றது. கடந்த ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில்;; 746இ085 எண்ணிக்கையிலான விமானப் பயணிகளின செயற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவற்றில் 409இ496 எண்ணிக்கையானது வருகை தந்தவர்கள் என்பதுடன்இ 336இ589 எண்ணிக்கையிலானது இந்நாட்டிலிருந்து வெளியேறியவர்களாவர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானப் பயணிகளின் கொள்ளளவூ வருடாந்தம் 06 மில்லியன் ஆகும். கொவிட் தொற்று நோய் ஏற்படுவதற்கு முன்னர் இதனது வருடாந்த பயணிகளின் செயற்பாட்டு நடவடிக்கைகள் 10 மில்லியனை மிஞ்சியிருந்தது. தற்போது விமான நிலையத்தினுள் செயற்படுத்தப்படும் அபிவிருத்திக் கருத்திட்டங்கள் முடிவூற்றதன் பின்னர் இதனது பயணிகளின் செயற்பாட்டு நடவடிக்கைகள் வருடாந்தம் 15 மில்லியன் வரையில் அதிகரிப்பதற்கும் இயலும் எனவூம் கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இதன் போது தெரியப்படுத்தினார்

a1d19385 031d 47d6 9cc0 fd82a6875fb3

சுற்றுலா அமைச்சின் செய்திகள்

Sri Lanka Tourism makes inroads to the Middle Eastern Market

On April 28, 2025, the Sri Lanka Tourism Promotion Bureau (SLTPB) proudly inaugurated its dynamic national pavilion at the 32nd Arabian Travel Market (ATM) held at the Dubai World Trade Centre.

Continue Reading

Sri Lanka’s Nalani Madhushani Wickramaratna to Shine at the Prestigious "Queen of the World International Pageant – Class of 2025"

Colombo, Sri Lanka – April 21, 2025 – Nalani Madhushani Wickramaratna, crowned Elite Queen of the World – Sri Lanka in 2024, is set to represent Sri Lanka at the globally renowned "Queen of the World International Pageant – Class of 2025" i

Continue Reading
Exit
மாவட்டம்