சிறி லங்கன் விமான பயணிகளுக்கு உள்நாட்டு உணவு வேளையொன்றை வழங்குவதற்கு சிறிலங்கன் விமான சேவைக் கம்பனி நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கைக்கே உரிய போசாக்கு நிறைந்த உணவு வேளையொன்றை விமானத்திலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக அக் கம்பனி கூறுகின்றது. இந்த உள்நாட்டு உணவு வேளை எதிர்காலத்தில் முறையாக சிறி லங்கன் விமானங்களுக்கு அறிமுகம் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த உணவு வேளையை அறிமுகம் செய்யும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (25) ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்தின் செரன்டிப் மண்டபத்தில் நடைபெற்றது. அதன் போது பிரதான அதிதியாக பங்கபற்றியது சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்களாகும்.
இந்நாட்டுக்கு வருகை தருகின்ற சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை பற்றிய முதலாவது அனுபவம் கிடைப்பது சிறி லங்கன் விமானத்திலாகும் என கௌரவ அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் இங்கு குறிப்பிட்டார்கள். அதன் போது உள்நாட்டு உணவு வேளையொன்றின் அனுபவத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தமை சமகாலத்தில் செய்ய வேண்டிய மிக பொருத்தமான செயற்பாடொன்று என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்விற்கு சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ். ஹெட்டியாராச்சி, விமனா நிலையம் மற்றும் ஏற்றுமதி திட்டமிடல் வலய இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜனக சிறி சந்திரகுப்த, சிறி லங்கன் கம்பனியின் தலைவர் அசோக்க பதிரண, சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மாதாச, விமான நிலைய விமான சேவைகள் கம்பனியின் உப தலைவர் ரஜீவ் சூரியஆரச்சி ஆகியோர் பங்குபற்றினர்.