- மார்ச் 27 ஆம் திகதி முதல் இரத்மலான விமான நிலையத்திலிருந்து கால அட்டவணை அடிப்படையில் விமான பயணங்களை ஆரம்பிக்கின்ற விமான கம்பனிகளுக்கு சலுகை.......
- விமான நிலைய விமான வருகை வரி 50 % சதவீதத்தால் குறைக்கப்படுகின்றது...
- அமைச்சரவைத் தீர்மானம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என சுற்றுலா அமைச்சர் கூறினார்.....
இரத்மலான விமான நிலையத்திலிருந்து கால அட்டவணைப்படி விமான பயணங்களை ஆரம்பிக்கின்ற விமான போக்குவரத்துக் கம்பனிகளுக்கு சலுகை வழங்குவதற்கு அரசு ஆயத்தமாக உள்ளது. அதன் பிரகாரம் அவ் விமானக் கம்பனிகளிலிருந்து அறவிடப்படுகின்ற விமான நிலைய வருகை தீர்வையை 50% ஆல் குறைப்பதற்கு எதிர்பார்ப்பதாக சுற்றுலா அமைச்சர் கௌரவ பிரசன்ன ரணதுங்க அவர்கள் கூறினார்கள். இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு அமுல்படுத்தப்படும். அதற்குரிய அமைச்சரவை பத்திரம் அமைச்சரவையின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சுற்றுலா அமைச்சர் கூறினார்கள்.
55 வருடங்களின் பின்னர் இரத்மலான சர்வதேச விமனா நிலையம் தனது சர்வதேச விமானப் பயணங்களை இம் மாதம் 27 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. மாலைதீவு விமான போக்குவரத்துக் கம்பனி மற்றும் இலங்கை தனியார் விமான போக்குவரத்துக் கம்பனியொன்றான FITS AIR கம்பனி இது தொடர்பாக தற்பொழுது உடன்பாட்டை தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார். இதற்கு முன்னர் இரத்மலான விமான நிலையத்தில் வருகை வரி 2020 ஒற்றோபர் மாதம் 01 ஆம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு 50 % சதவீதத்தால் குறைக்கப்பட்டது. புதிய தீர்மானத்ற்கு ஏற்ப இம் மாதம் 27 ஆம் திகதி முதல் இரத்மலான விமான நிலையத்திலிருந்து கால அட்டவணைப்படியான விமான பயணங்களை ஆரம்பிக்கின்ற விமான கம்பனிகளிடமிருந்து அறவிடப்படும் அமேரிக்க டொலர் 60 ஆன வருகை தீர்வையிலிருந்து அமேரிக்க டொலர் 30 ஐ மாத்திரமே அறவிடப்படும்.
இரத்மலான சர்வதேச விமான நிலையத்தை குறைந்த செலவு விமான பயணங்கள் தொடர்பாக புதிய பிரயாணத் தளமாக பிரபல்யப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறான பிரதேச செயற்பாடுகள் தொடர்பாக அந்த விமான நிலையத்தில் உள்ள சாத்தியப்பாட்டை இனங் கண்டுள்ளதாகவும் அது தொடர்பாக சிவில் விமான சேவை அதிகாரசபை மற்றும் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் கம்பனி தனது நிதியை ஈடுபடுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதே போன்று இரத்மலான விமான நிலையம் பிராந்திய இடங்களுக்கு சேவை வழங்குகின்ற சர்வதேச விமான நிலையமாக ஆக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் 55 வருடங்களின் பின்னர் மாலைதீவிற்கு நேரடி விமான பயணங்களை ஆரம்பிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுப்பது அதன் பிரகாரமாகும் எனவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்கள் மேலும் குறிப்பிட்டார்கள்.
இரத்மலானை சர்வதேச விமான நிலையம் 1938 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதுடன் 1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமான பயணங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக பிராந்திய சர்வதேச விமான பயணங்கள் அமுல்படுத்தபட்டு வந்தன. மீண்டும் பிராந்திய சர்வதேச விமான நிலையமொன்றாக இரத்மலான விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்படுவதுடன் அதனை இலங்கையின் பிராந்திய விமான மத்திய நிலையமாக முன்னேற்றப்படும் என சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கொள்கை பிரகடணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்மொழிவொன்றை அமுல்படுத்துகின்றமையுமாகும்.
தற்பொழுதைய அரசு அதிகாரத்திற்கு தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இரத்மலான சர்வதேச விமான நிலையத்தை பிரதான துறைகள் 05 இன் ஊடாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமான சேவை மத்திய நிலையமொன்று, களியாட்ட விமானப் பயண மத்திய நிலையமொன்று, விமான பயிற்சி நிலையமொன்றாகவும் அதனை அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக உயர் வருமானம் பெறுகின்ற நபர்களை இலக்கு வைத்து தனியார் விமானங்களை இலங்கைக்கு தருவித்துக் கொள்வதனை ஊக்கப்படுத்துவதற்கும், தனியார் விமானங்கள் தொடர்பாக தொழில்நுட்ப தரிப்பிட சேவைகள் விமான எரிபொருள் நிரப்புதல் போன்ற தேவைகளை நிறைவேற்றுவதற்கும் இதன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.